பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4}

பாம்புக் கடிக்கு உள்ளிப் பூண்டு, பெருங்காயம், அரிதாரம், மிளகு, இந்துப்பு இவற்றைச் சம அளவு சேர்த்து அரைத்து அதனைப் பிள்ளைப் பாலில் இழைத்து விஷமேறியவர் கண் னில் கலிக்கம் போட்டால் விஷம் தீரும்.

இரத்த சுத்திக்கு

தோல் நீக்கிய இஞ்சியை நசுக்கிச் சாறு எடுக்க வேண்டும். இஞ்சிச் சாற்றைக் கொஞ்ச நேரம் வைத்திருந் தால் சுண்ணும்பு போன்ற இஞ்சிச் சத்து கீழே தங்கும். அதை அப்புறப்படுத்தி இஞ்சிச் சாற்றை மெல்லிய துணி யில் வடிகட்ட வேண்டும். அரை அவுன்ஸ் இஞ்சிச் சாற்றில் அரை அவுன்ஸ் சுத்தத் தேனைக் கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிடவேண்டும். இரத்த விருத்தியும், சீரண சக்தியும், நரம்பு வலுவும் ஏற்படும்.

- விஷ முறிவுக்கு - வெள் வேலம் பட்டைச் சூரணத்தைக் காடி நீரில் கலந்து குடிக்க எவ்விஷமும் முறியும்.

கீரிப் பூச்சி வெளிவர * முருங்கை இலச் சாற்றைக் காலையில் குடிக்கக் கீரிப் பூச்சிகள் வெளிவரும்.

கொடிய கட்டிக்கு குதிரைக் குளம்புச் சாற்றைக் கட்டிகளின்மேல் பூசி வரக் கட்டி கரையும்.