பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

உஷ்ண இருமல் போக

புழுங்கலரிசியும் வால் மிளகும் சேர்த்து வாயில் போட்டு வைத்திருந்தால் அதனின்றும் ரசம் ஊறும். அதை உட்கொள்ள இருமல் தீரும்.

அந்திரவாயுவிற்கு

பச்சையாகவுள்ள புகையிலையும், சீரகமும் சேர்த்துத் தண்ணீரில் அரைத்து மூன்று நாள் காலை மாலை உட் கொள்ளவும். கடும் பத்தியமாக இருத்தல் வேண்டும்.

வீக்கத்திற்கு

ஒதியப்பட்டையை கன்ருக நறுக்கி புளிச்ச தண்ணீர் விட்டுக் கலந்து வீக்கமுள்ள இடத்தில் இதை வைத்துக் கட்டி விடவும். இத்துடன் புளிச்ச தண்ணீரை அக்கட்டிகளின் மேல் அடிக்கடி விட்டுக் கொண்டிருக்க வேண்டும். முட்டி பிசகிய இடத்திலும் இம்மாதிரி கட்டலாம்.

சொறி சிரங்குக்கு மிளகு, கார்ப்போக அரிசி, ஏலம், அரிசி, கெந்தகம், சூடன், பிராய்ப்பட்டை வகைக்கு ஒரு வராகன்டை வீதம் பொடி செய்து அரைக்கால் படி கல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதை உடம்பில் காலையில் தடவி மாலையில் சீயக்காய் இட்டுத் தேய்த்துக் குளிக்க சொறி

சிரங்கு தீரும்.

, வேறு - ஏலம், கடுக்காய், கஸ்தூரி மஞ்சள், கார்ப்போக அரிசி, காட்டுச் சீரகம், நீரடி முத்து இவைகளைச் சம