பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

எடையாகப் பொடி செய்து அப்பொடிக்குச் சம எடையாக மிளகுத்துள் சேர்த்து இவைகளை ஊமத்துக் காய்க்குள் அடைத்து ஒன்றரை எரு முட்டையில் புடம் போட் டெடுத்து ஒரு படி தேங்காயெண்ணெயில் அரைத்துப் போட்டு மூன்று நாள் சூரிய புடம் வைத்து அந்த எண்ணெயைத் தலையின் மேல் தடவி வர சிரங்கின் தினவு நமைச்சல் தீரும். *

அசீரணத்திற்கு

சுக்கு ஒரு பலம், சோத்துப்பு அரைப்பலம் எடுத்துக் கொள்ள வேண்டும். சோத்துப்பை தண்ணீர் சேர்த்துக் கட்டியாய் அரைத்துச் சுக்கின் மேல் பூச வேண்டும். பின்பு இதை கும்பித் தணலில் புகுத்தி வேகவைத்து எடுத்து, உப்புக் கவசத்தை நீக்கிவிட வேண்டும். பின்பு சுக்கைத் தூள் செய்து ஒரு சிட்டிகை முதல் இரண்டு சிட்டிகை வரை வாயில் இட்டு வெந்நீர் சாப்பிட வேண்டும். இவ்விதம் செய்தால் வாயுவால் உண்டாகும் பேதிகள், மார்பு அடைப்பு, வயிற்றிரைச்சல் முதலியவை நீங்கும். . -

பசி உண்டாக

சுக்குப் பொடி ஒரு பலம். தோல் எடுத்த ஏலம் அரைப் பலம். இரண்டையும் கன்ருகப் பொடி செய்து தண்ணீரிலிட்டு பனங்கற்கண்டு வேண்டிய அளவு சேர்த்துக் காய்ச்சிப் பின்பு வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதனுடன் பால் சேர்த்துச் சாப்பிட நல்ல பசி உண்டாகும்.