பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

40 முதல் 80 வரை பித்த காலம். 80-க்கு மேல் 120 வரை சிலேட்டும காலம்.

நாடியின் தோற்றம்

மார்பின் இடது பக்கத்தில் இருதயம் இருக்கிறது. இது குவிந்து விரியும் தன்மை உடையது. குவியும்போது நரம்புகளின் வழியாக இரத்தம் செல்வதால் நாடிகள் விரியும். மீண்டும் விரியும்போது நாடி நரம்பிலிருக்கும் இரத்தம் குறைந்து நாடி சுருங்கும். இவ்விதமாக இதயங் குவியவும் சுருங்கவுமாக இருப்பதால் அதனுடன் சேர்ந்த நாடி நரம்புகளுக்கும் விரிந்து சுருங்கும் தன்மை உண்டு. இச்செயலைத்தான் நாடி நடை என்று சொல்லப்படுகிறது.

நாடி நடையின் குணங்கள்

காடி கடையின் குணமானது இருதயத்தின் கடைக்கு ஒத்து இருக்கும். இருதய நடையின் பேதாபேதங்களை நாடி மக்குத் தெரிவிக்கும். தேகத்தின் பிரதான உறுப்பு இருதயமே. அதனுடைய கடை நம் தேக நிலைக்கு ஒத்திருக்கும். நோயுற்றவர்களின் நாடி இயற்கையான நடைக்கு இருக்காது. இதை இருதயம் தெரிந்து நாடி களின் மூலமாக நமக்குத் தெரிவிக்கின்றது. வியாதிகளின் கூறுகளை நாடி நடையின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

நாடியின் கால அளவு ஒரு நிமிடத்திற்கு

பிறந்த குழந்தைகட்கு 140 நாடி நடக்கும். இளமையில் 120 முதல் 130 வரை நாடி நடக்கும். வாலிபர்களுக்கு 90 முதல் 100 வரை நடக்கும். பூரண வளர்ச்சி