பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/5

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இந்தக் கதை


அரபுக் கதைகளிலே நாங்கள் வெளியிட்டிருக்கும் 'சிந்து பாதின் கடல் யாத்திரைகள்', 'அலாவுத்தீனும் அற்புத விளக்கும்’, 'அலிபாபா', 'நல்லவனும் நயவஞ்சதனும்'ஆகிய நான்கும் 1,001 இரவுகள் அல்லது அராபியர் நிசிக் கதைகள்’ என்ற நூலைச் சேர்ந்தவை.

சிந்துபாதின் ஏழு யாத்திரைகளையும், அவன் அடைந்த துன்பங்களையும் துயரங்களையும் முடிவில் செல்வமும் செழிப்பும் பெற்று, அவன் உயர்ந்த நிலையில் வாழ்வதையும் முதற்புத்தகம் விளக்குகின்றது.

ஏழைச் சிறுவனான அலாவுத்தீன், அற்புத விளக்கு ஒன்றின் உதவியால், மாட மாளிகையும்; எண்ணற்ற நிதிகளும் பெற்று, சுல்தான் மகளையும் மணந்துகொண்டு, அரசனாவதைக் கூறுகிறது அலாவுத்தீனும் அற்புத விளக்கும் என்ற கதை.

நாற்பது திருடர்களை எதிர்த்து வெற்றி கொண்டு, பெருஞ் செல்வங்களைப் பெற்று, வாழ்நாள் முழுதும் கவலையில்லாமல் ஆனந்தமாக வாழும் விறகு வெட்டியின் வரலாற்றை 'அலிபாபா' வின் கதை விவரிக்கின்றது.

இந்த நல்லவனும் நயவஞ்சகனும் ஒரு தனி இனத்தைச் சேர்ந்தது. ஒருவன் உண்மையான நண்பன்; அவனுடன் சேர்ந்த மற்றவன் தீயவன். தீமையே செய்து வருபவனுக்கும் நன்மையே செய்கிறான் நல்லவன்.

'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை
செய்ங்கன்றி கொன்ற மகற்கு'

என்ற குறளின்படி தீயவனுக்கு உய்வில்லாமற்போகின்றது. நம்மோடு வாழும் மக்களிடத்தில் அன்புகொண்டு, அவர்களுக்கு உதவிகள் செய்து வருவதே உயர்ந்த அறம் என்பதை இக்கதை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.

பழனியப்பா பிரதர்ஸ்