பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. நல்லவை ஆற்றுமின் இந்த நிலையில் இராமாயண இலக்கியப் பணியினை நிறுத்தி, ஐயர் அவர்கள் வள்ளுவர் குறள் வழியே கண்ட இலக்கியப் பணியினைக் காண்போம். குறள் உலக இலக்கியம். எனினும் ஐயரைப் போன்ற அறிஞர்கள் அதை வேற்றுமொழிகளில் மொழிபெயர்த்து உதவியதனாலேதான் அது உலக இலக்கியம் என்ற பெயரைப் பெற்றது. ஐயர் அவர்களுக்குமுன் வேறு சிலரும் இக்குறளுக்கு மொழிபெயர்ப்பு ஆங்கிலத்திலும் பிறமொழி களிலும் செய்திருக்கிறார்கள் என்றாலும் அவர்களுள் பலரும் தமிழ் மரபினை அறியாதவர்களாதலின், வள்ளுவர் உள்ளத்து. உருவான கருத்துக்களை நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. ஐயர் அவர்கள் தமிழ் உள்ளம் வள்ளுவர் உள்ளத் தைப் புரிந்து கொண்ட காரணத்தினாலேயே இவர் மொழி பெயர்ப்புப்பணி செம்மையாக அமைந்துள்ளது எனலாம். ஐயர் அவர்கள் மொழிபெயர்ப்பினை 1916ஆம் ஆண்டு சுப்பிர மணிய சிவா அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதற்குப் பிறகு வேறு பதிப்புக்கள் வந்தனவா என்பது தெரியவில்லை; வந்திருக்கலாம். எனினும் இன்று எதுவும் கிடைக்காத நிலையில், தமிழகம் ஐயர் இலக்கியப் பணியினை அறிந்து கொள்ளாவகையில் நிற்கிறது, இந்த நிலை மாற வேண்டும்; விரைவில் அந்நூல் வெளிவர வேண்டும். தம்மொழிபெயர்ப்பின் முன்னுரையில் ஐயரவர்கள், வள்ளுவர்தம் குறள் சாதி, மொழி, இன, நாடு, காலவேறு பாடுகளைக் கடந்து எல்லாருக்கும் எப்போதும் ஒத்த் நிலையில் அறம் வழங்குவதைச் சுட்டிக்காட்டி, அந்நிலையில் "தாம் பெற்ற இன்பம் உலகம் பெற வேண்டும்’ என்ற உணர்வில், தமிழருக்கே உரியதான அதனை உலகுக்கு வாரி வழங்கவேண்டிய எண்ணத்தில் மொழி பெயர்த்ததாகக் குறிக் %irpms. It is a great pity that such a treasure should