பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித் தமிழ் இயக்கம் 101 இவ்வாறு தமிழுக்குக் கதியாகிய கம்பரையும் திருவள்ளுவரையும் உலகுக்கு உணர்த்திய மாபெரும் தமிழ் இலக்கியப்பணி செய்த வ.வே.சு. ஐயர் அவர்கள் புகழ் வையம் உள்ளளவும் வாழும் என்பது உறுதி. தமிழக அரசும் தமிழரும் அவர் தம் நூல்களை நல்ல முறையில் வெளிக் கொணர்ந்து தமிழன்னையின் அழகினை மேலும் பொலிவுறச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அமைகின்றேன். வணக்கம். தனித் தமிழ் இயக்கம் மொழி மனிதன் பிறரொடு கலந்து வாழப் பயன் படுகிறது. வளர்ச்சி அடைந்த மொழிகளில் இலக்கண இலக்கிய வளங்களும் நிரம்பியிருக்கும். அத்தகைய மொழிகள் பல உலகில் உள்ளன. நம் நாட்டிலும் பல மொழிகள் உள்ளன. அவற்றுள் தென் இந்தியாவில் பேசப் பெறுகின்ற மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை. அம்மொழிகளுள் தெரன்மையானது-தாய்மையாகக் கொள் ளக்கூடியது தமிழாகும். அதில் பிறமொழி கலவாது காக்க எழுந்த இயக்கமே தனித் தமிழ் இயக்க மாகும். தமிழ் மொழி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டே இலக்கிய வளம் வாய்ந்தது. பழைமையான இலக்கணமாகிய தொல்காப்பியத்திலும் பின்வந்த சங்க இலக்கியங்களிலும் தமிழின் தனித் தன்மையினையும் பண்பினையும் காண முடியும். சங்க இலக்கியங்களில் ஒருசில வேற்று மொழிச் சொற்கள் இருப்பினும் அவை விரல்விட்டு எண்ணக் கூடியவையாம். -