பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித் தமிழ் இயக்கம் 103 பெயர்களாக மாற்றி அமைத்துக் கொண்டவர் சிலர். சூரிய நாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞரானார்'; சுவாமி வேதாசலம் மறைமலை அடிகளானார். இந்த வகையில் பெயர் மாற்றமன்றி, எழுதுவது பேசுவது அனைத்திலும் தனித் தமிழ்ச் சொற்களே இடம்பெற வேண்டும் என்று சிலர் துணிந்தனர். அவர்களுள் முன் நின்றவர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளாராவர். நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற அறிஞர்களும் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வ. சுப்பையாப்பிள்ளை போன்ற செயலர்களும் இந்த இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டனர். பெரியார், ஈ.வே.ரா. போன்றவர்கள் இந்த இயக்கத்தில் அவ்வளவாக ஈடுபடவில்லை எனலாம். பின் இராஜாஜி அவர்கள் முதலமைச்சரான காலை கட்டாய இந்தியைப் புகுத்தியபோது அனைவரும் ஒன்று திரண்டு எதிர்த்தனர். அந்த எதிர்ப்பின் காரணத்தாலும் "தனித்தமிழ் இயக்கம் தலைநிமிர்ந்து நின்றது. தனிமனிதர் பெயர்களும் சில ஊர்ப் பெயர்களும் பண்டைத் தமிழ்ப் பெயர் களாக மாற்றப் பெற்றன. பழந்தமிழ்ப் பெயர்களைத் தத்தம் மக்களுக்கும் மனைகளுக்கும் சிலர் இட்டு மகிழ்ந்தனர். எனினும் இந்த இயக்கம் பொதுமக்கள் இயக்கமாக மாற வில்லையாதலால் நாட்டில் நிலைத்துக் கால் கொள்ள வில்லை-அறிஞர் சிலரும் அவரைச் சார்ந்தோரும் தனித்தமிழ் சொற்களை அழைப்பிதழ் போன்றவற்றிலும் பிறவற்றிலும் பயன்படுத்தி வருகிறார்கள். - பொதுவாக இந்த இயக்கம் நிலைத்துக் கால் கொள்ளா விடினும் இன்று நாட்டின் பல ஊர்ப் பெயர்கள் பழந்தமிழ் பெயர்களைப் பெற்று வருகின்றன. மக்களுள் சிலர் நல்ல பழந்தமிழ்ப் பெயர்களை மக்களுக்கு இட்டு அழைக்கின்றனர்.