பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக் கவிஞருடன் நான் 107 வயிற்றுப் பேரனுக்கு எங்கள் பள்ளி ஆசிரியை ஒருவர் துணைவியானார், (தற்போது மாநகராட்சியில் பணியாற்று கிறார்). அவர்தம் குழந்தைகள் எங்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர். அவர்களைக் காணும் போதெல்லாம் கவிஞரை நினைத்து மகிழ்வேன். நான் எப்போதும் யாருடனும் நெருங்கிச் செல்லாது அழலின் நீங்கான் அணுகான்' என்ற மொழிப்படி அமைந்து இன்று வரை வாழ்வதால் அவரு டனும் நெருங்கிப் பழகவில்லை. அதனால் இன்றும் பல ருடைய வெறுப்புக்கு ஆளாகின்றேன். என் செய்ய? அது என் நிலை, அவர்தம் பாடல்கள் பல. உலகம் அவர் பாடல்களைப் போற்றுகின்றது. நான் உளங்கொண்ட இரண்டொன்றினை மட்டும் இங்கே காட்டி அமைகின்றேன். ஆங்கில இலக்கியம் பல கண்டு, மக்கள் உள்ளத்து உணர் வூட்டிய பெர்னாட்சா அவர்கள் ‘There was only one Christian who died on the cross' என்று சொல்லிய வாசகம் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும். கிறித்தவ சமயத்துக்கு மட்டுமின்றி, எல்லாச் சமயங் களுக்கும் இது பொருந்தும் என நான் என் நூல்கள் இரண் டொன்றில் குறித்தும் இருக்கிறேன். நம் கவிஞர் அவர்கள் இந்தக் கருத்தினை விளக்கியதோடு, இன்றைய திருச்சபை கள்-கோயில்கள் உள்ள நிலையினைத் தம் பாடலில் சுட்டு வதை எண்ணி எண்ணி வியந்தேன். பிரஞ்சு நாட்டு திருச்சபை ஒன்றிற்கு ஈஸ்டர் சண்டே நாளில்-நான் சென்ற போது இப்பாடல் என் நினைவுக்கு வந்தது. அதை அப்படியே என் நூலில் (ஏழு நாடுகளில் எழுபது நாட்கள், பக்கம் 48) குறித்துள்ளேன். அந்தப் பாடலை இங்கே எழுதலாம் என எண்ணுகிறேன்.