பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டு நலம் 115 சகுனி தன் உடன் உற்றவரைக் கொல்ல எண்ணிச் செய லாற்றிய துரியோதனனைப் பழிவாங்க நினைத்தான். அவனே தருமரைச் சூதாட அழைத்து, வெற்றி கண்டு, காட்டுக்கு அனுப்பினான். பின்னும் துரியோதனனுக்குத் தான் சாதகமாக உள்ளதாகக் காட்டி, அவ்வப்போது தூண்டி, பாரதப் போருக்கு வித்திட்டான். முடிவில் கெளர வர்கள் அனைவரும் அழிந்ததோடு அவனும் முடிவுற்றான். சகுனியின் வலையில் துரியோதனன் வீழாதிருந்திருப் பானாயின் பாரதப் போர் நடந்திராது. இராமாயணப் போரும் அப்படியே. இராவணன் தன் தங்கை சூர்ப்பனகையின் கணவனை முன்னொரு போரில் (நிலாத கவச காலகேயர் போர் என்பர்) அறிந்தோ அறியா மலோ கொன்று விட்டான் என்று சூர்ப்பனகை, தன் கணவனைக் கொன்ற இராவணனைப் பூண்டொடு அழிக்கத் திட்டமிட்டாள். அதில் வெற்றியும் பெற்றாள். அதில் அவள் இறக்கவில்லை. எங்கோ இருந்து இராவணன் மறைந்த பின்பு மகிழ்ந்தாள். இதைக் கம்பர் வீடணன் வாக்கில், 'கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்றது குறித்துக் கொடுமை சூழ்ந்து பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப்பழி தீர்ந்தாளோ எனக் காட்டு கிறார். ஆம். கணவன் இறந்தபோது, பல்லாலே இதழை அதுக்கிச் சபதம் செய்தாள். அவள் தன் பழி தீர்க்கச் சமயம் பார்த்திருந்தாள். இராமன் வீரத்தை அறிந்த அவள் இராமன் காட்டுக்கு வந்த போது அவனுக்கு மாறாக-அவன் மனைவியைப் பற்றிக்கூறி, இராவணனைச் சீதையைக் கொணர அனுப்பினாள். கம்பர் அவள் கூற்றாக கூறும் பாடல்களில் இக்கொடுஞ் செயலைச் சிலேடையாகக் காட்டுகிறார். -