பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கல்லவை ஆற்றுமின் மனிதனுக்கு ஒரறிவுடைய உயிரை உதாரணமாகக் காட்டித் திருத்த முயல்கிறார் ஒளவையார். ஆனால் அவன் எங்கே திருந்தினான்? சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் குறைக்கும் தனையும் குளிர் கிழலைத் தந்து மறைக்குமாம் கண்டிர் மரம்’ என்பது ஒளவையார் வாக்கு. மரம் வெட்ட வெட்டத் தழைத்து, அவ்வெட்டினவனுக்கே நிழல் தந்து, வெம்மை போக்கி நன்மை தருகிறதே! மனிதர் அதைக் கண்டாவது தீங்கு செய்தார்க்கு நன்மை செய்யக் கற்றுக் கொள்ளக் கூடாதா என்கிறார் அவர். இந்த உயரிய பண்பு உலகில் தழைக்கின் வேறு எல்லாக் கொடுமைகளும் இல்லையாகுமே! மனிதனுக்கு மனிதன்சாதிக்குச் சாதி-சமயத்துக்குச் சமயம்-நாட்டுக்கு நாடு மாறுபட்டுப் போர் விளைக்கும் கொடுமைகள் அனைத்தும் இல்லாது ஒழியுமல்லவா! ஆனால் எண்ணிப் பார்ப்பார் யார்? தான் மனிதன் என்றும்-அம்மனிதப் பண்பு உள்ளவன் என்றும்--சான்றோன் என்றும் கூறிக் கொள்கின்றவன் இதை எண்ணிப் பார்க்க வேண்டுமே! எண்ணிப் பார்க்கிறானா? இல்லையே! மற்றவனை எப்படி மாய்ப்பது-தேய்ப்பது என்ற உணர்வில்தானே வாழ்கின்றான். தான் வாழ எந்தக் கொடுமையினையும் செய்யத் தயங்கவில்லையே! இதனா லன்றோ உலகம் அழிவு நோக்கிச் செல்லுகின்றது. இதற்கு மாற்றம் இல்லையா உண்டு. இதோ வள்ளுவர் வழி காட்டு கிறார். வள்ளுவர் எத்தனையோ வகைகளில் வழி காட்டு கிறார். அத்தனையும் இங்கே காட்ட இயலாது. ஒன்றை