பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கல்லவை ஆற்றுமின் -பேசுகின்ற-செயலாற்றுகின்ற நிலையில் நிற்கின்றோம். 'இப்படியன் இந்நிறத்ததன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே’ என்ற பாடல் எழுந்த நாட்டிலே சமயத்தால் எத்தனை பிணக்கு? சாதி இரண்டொழிய வேறில்லை, இட்டார் பெரியோர்இடாதார் இழிகுலத்தார்’ என்று பாகுபடுத்திய நாட்டில் சாதி வேறுபாட்டால் எத்தனை பிளவுகள்-சண்டைகள்! சான்றோர் இவற்றையெல்லாம் கண்டு நைகின்றனர்வாடுகின்றனர்-அவ்வப்போது வருந்திப் பாடுகின்றனர். ! எவ்வுயிரும் பராபரன் சந்நிதியதாகும் என்று எல்லா உயிர் களையும் ஒத்து நோக்கும் பண்பாடு நாட்டில் வாழ வில்லையே வாடிய பயிரைக் கண்டபோது வாடும் பண்பு மலரவில்லையே! மாறாக வீட்டுக்கு வீடு-ஊருக்கு ஊர் மாறுபட்டு வேறுபாடுறுவதைத்தானே காண்கிறோம். உலகில் வாழும் எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றனர் சான்றோர். ‘எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லைமாதோ' என்கின்றார் கம்பர். சமதர்மச் சமவாழ்வுச் சமுதாயம் காண விரும்பினர் சான்றோர். விரும்புகின்றனர். நல்லோர். ஆனால் நாம் அவர்கள் எழுதிய அத்தனைப் பாடல்களையும் படித்துக் கொண்டே உள்ளத்தே மாசு வளர்த்து, காழ்ப் புணர்ச்சி கொண்டு ஒட்டி உறவாடாது-உளத்தால் ஒன்றாது பலப்பல பிரிவாகப் பிரிந்து நிற்கின்றோம். இவற்றையெல்லாம் பார்க்கின்றார் நாலடி யாத்த நல்ல சான்றோர். 'மனிதா நல்ல குலம் தீய குலம் என்று சொல்லுகிறாயே? அதை எப்படிப் பிரித்தாய்? அவற்றின் பொருள் என்ன? அவை சொல்லளவில் நிற்பனவா? உண்மையில் பொருள் தருகின்றனவா? எண்ணிப் பார்த்