பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டு நலம் 421 தாயா? வள்ளுவர் பாடிய குடிமை என்னும் அதிகாரத்தை எப்போதாயினும் தொட்டுப் பார்த்திருக்கிறாயா? குடி, அல்லது குலம் என்பது எதனால் உருவாவது? மனிதகுலம், ஒன்றே என்று உணர்வாயா?" என்று கேட்டு, அந்த ஒரே மனித குலத்தில் நல்ல குலம் தீயகுலம் என்று நீ பிரிக்க வேண்டுமானால் ஒரே வழிதான் உண்டு. வள்ளுவர் பல கூறுகின்றார். நான் சுருக்கமாக இங்கே கூறுவதைக் கேள். என்கின்றார். 'நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லள வல்லால் பொருளில்லை-தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ? தவம் கல்வி ஆள்வினை என்றிவற்றான் ஆகும் குலம் (20.5) என்பது அவர் வாக்கு. மனித வாழ்விற்கு ஏற்ற நல்ல கருமங்களைச் செய்தலாகிய தவம், தீய செறுவார்க்கும் நலம் செய்ய அறிவுறுத்தும் கல்வியைக் கற்று மற்றவர்க்கும் அளித்தல், இன்பம் விழையாது வினை விழையும் ஆள்வினை உடைமை ஆகிய நற்பண்புகளை உடையவனே நல்ல குலத்தவனாவான் எனக் காட்டி, மனித சமுதாயத்தைத் திருத்த நினைக்கிறார். தன் பண்பை விட்டு எங்கோ சென்று கொண்டிருக்கின்ற மனிதன், நின்று, இச்சான்றோர் சொன்னதை எண்ணி, நாடு வாழ-நானிலம் வாழ நற்செயலாம் தவமியற்றி, எல்லாரும் வாழ எண்ணும் கல்வி கற்று, சளைக்காது நல்வினை ஆற்றி உயர்வானாயின் அந்த நாள் நல்லநாளாகும், நல்ல சான்றோர் வாய்ச்சொல் நாட்டில் தவழும் நாளாகும். அந்நாள் விரைந்து விடிவதாக எனப் போற்றுகின்றேன். ந-8