பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கல்லவை ஆற்றுமின் சமயங்களிலும் காணும் ஒன்றல்லவா! அதே போலக் கோணி யம்மன் பற்றி கோவையை அடுத்து வாழ் இருளர்களிடையும் அதனிடம் அவர்கள் கொண்ட நம்பிக்கையும் அசைக்க முடியர் நிலையில் இருப்பதறிந்தேன். பொதுவாக Tribal people இறைவனைப் போற்றிப் பாடும் பாடல்களில் தனக்கென வேண்டும் தனித்தன்மை காணமுடியாத ஒன்று. மாறாகச் சமுதாயமே மனித குலமே வாழவேண்டும் என்ற வேண்டு கோளாகவே அவை அமைகின்றன. தாங்கள் வழிபாடாற்றும் கோயில்களுக்குத் தங்கள் மரபில் உள்ளவரையே பூசாரியாக வைத்து வழிபடும் நிலையைக் காண்கிறோம். தோதவர் குடும்பப் பெண்கள் கோயில் பக்கமே தலைகாட்டக் கூடாது. வள்ளுவர் கூறிய தெய்வம் தொழாள் என்ற குறளுக்கு அவர்கள் இலக்காக வாழ்கின்றார்கள். சில வகுப்பார் உருவ மற்ற வழிபாடே செய்கின்றனர். சிலர் நெருப்பினைத் தெய்வமாக நம்புகின்றனர். சிலர் சிவசக்தி வழி பாட்டினைக் கொள்ளுகின்றனர். எனினும் அவர்கள் வாழும் சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் கொண் டாடும் பல விழாக்களைத் தாங்களும் கொள்ளு கின்றனர். ஆயினும் குலதெய்வ வழிபாட்டைச் சிறந்த முறையில் செய்வர், அவ்வழிபாடும் கூட்டுமுறையில் (Community) தான் நடைபெறும். மஞ்சுமலைவாழும் குறும்பர் என்னும் மரபார் தெய்வம், விழா ஆற்றக் கட்டளை இட்டால்தான் விழா எடுப்பர். இன்றேல் சில வருடங்கள் சழிந்தாலும் விழா இருக்காது. அவன் உத்தரவு இல்லாமல் அவனுக்கே விழா எடுத்தாலும் தவறுதான் என முற்றும் நம்புகின்றனர். அவர்கள் தெய்வம் வீரபத்திரர். மாரண்டஹள்ளியில் உள்ள இருளர் தமக்கு நோய் வந்தால் உடனே ஒரு கல்லை நட்டுத் தெய்வமாக வழிபடுவர். வேறு நிலைத்த கோயில் கிடையாது. பொதுவாக இக்காட்டு: