பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்குடிப் பண்பாடு 129 கின்றனர். சில:மரபின் மணமுறையில் வயதைக் கவனிப்ப தில்லை. 20 வயது ஆண் 40 வயதுப் பெண்ணையும் மணப் பதுண்டாம். மணநிகழ்ச்சிகளில் பெரும்பாலும் வாத்திய முறை போன்ற ஆடம்பரங்கள் கிடையா. நேரம், பொழுதுகூடச் சிலர் பார்ப்பதில்லை. ஒருமரபார் (தோதவர்) நிறைந்த அமாவாசையில் பகல் 12 மணி அளவில் மணம் முடித்தல் சிறந்தது என்பர். அதில் செவ்வாய்க்கிழமையும் கலந்தால் இன்னும் சிறப்புடையது என்பர். அத்தகைய மணம் ஒன்றினை நான் கண்ணால் கண்டேன். அதில் பெரியோர் வாழ்த்துதான் முக்கியம், பச்சிலைப்பந்தல்-பரந்தவெளிபால்வடியும் மரநிழல்-சுற்றத்தார் இவை மணத்துக்கு இன்றி யமையாதன. ஒருசில மரபார் தவிர்த்து, பெரும்பாலோர் கணவன், மனைவி ஆகிய இருவரும் தங்களுக்கு வேண்டியவர் களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுகின்றனர். அப்படியே விருப்பமில்லையானாலும் பஞ்சாயத்து முன்னிலையில் விடுதலை பெற்றுப் பிரியும் வழக்கமும் உண்டு. விருப்பமில்லாத மணம் நடப்பது அரிது. அப்படி நடந்தால் உடன் பிரிவுதான். இத்தகைய பிரிவுத் தீர்ப்பு ஒன்றினை சேர்வராயன்மலையிடை வாழும் பழங்கால மலையாளமக்கள் நடுவில் நான் கண்டேன். இவர்களுள் இருபாலரின் பலதார மணமும் வழக்கத்தில் உள்ளது. சிலர் மணம் நடந்த 7ஆம் நாள் தான் இருவரையும் தனியாக இருக்க விடுவர். கோவை பக்கத்திலே உள்ள இருளர் மரபில் ஒரு விசித்திர மான பழக்கத்தைக் கண்டேன். அவர்கள் பிறந்தால் மணம் செய்து கொள்ளாது இறக்கலாகாதாம். மணம் செய்து கொள்ளாதவரும் கூட இறக்குமுன் (இருபாலரும்) மணம் செய்து கொண்டுதான் இறப்பார்களாம். ஒருவேளை மணம் இல்லாது யாராவது இறந்து விட்டால், இறந்த மணத்துக்கு