பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்குடிப் பண்பாடு 131 பச்சிலையும் திருநீறும் இட்டு இறைவனை வணங்கி, அந்த நோயினைப் போக்கிக் கொள்வர். இப்படிக் கால்நடைகளைச் செல்வமாகவும் தெய்வமாகவும் போற்றுவதோடு, அவற்றின் பால், தயிர், மோர், நெய் முதலியவற்றை வருவார்க்கு இனாமாக வாரி வழங்கும் இவர்தம் பண்பாடு, இன்னும்: நகரங்கள் மறந்துவிட்டபோதும் இந்த ஒதுக்குப் புரங்கள் மனித உணர்வை மறக்கவில்லை என்பதை நினைவூட்டு கிறது. இந்தப் பழங்குடிமக்களுள் பெரும்பாலோர் தம்தம் வாழ்வுக்கு வேண்டிய உணவுப் பொருள் முதலியவற்றைத் தாங்களே பயிரிட்டுக் கொள்வர். உதகை நாட்டுக் கோதவர் (Kodos) உப்பு தவிர வேறு எதையும் வாங்க மாட்டோம் என்று சொல்லும்போது பெருமிதம் அடைகின்றனர். மாரண்டி ஹள்ளி பக்கம் உள்ள சிவசாரத்தார் உண்மையில் பெரும் ஆச்சாரத்தராகவே இருக்கின்றனர். தாமே சமைத்து உண்பதல்லது வேறு எந்த உறவினர் வீட்டிலும் உண்ண மாட் டார்கள். தலைக்கு எண்ணெய்க்குப் பதில் வெண்ணெயைத் தடவுவர். இவர்களும் மாடுகளைத் தெய்வமாகப் போற்று வதோடு தயிர், பால் முதலியவற்றை விற்காததால் நெப் மிகுதியாக உடையவர்கள். இன்னொரு சிறப்பு இவர்கள் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்க மாட்டார்கள்; அது பாவம் என்பது அவர்தம் அசைக்க முடியாத நம்பிக்கை. இவ்வாறு மனிதப்பண்புடன் வாழும் அவர்களை நாம் எல்லை ஒதுக்கி விட்டு, நாம்தான் மனிதர் என்று சொல்லி உலவி வருகிறோம். இந்த நாடோடிகள்தம் (Tribe people) கடவுள் நம்பிக்கை பற்றி மேலே கண்டோம். அவர்தம் வழிபாட்டு முறை சிறந்த நம்பிக்கைகள். அடிப்படையில் அமைவன. தீமிதிவிழா போன்றவற்றில் நம்பிக்கை கொண்டு தீயால் ஊறுபெறாது நிற்பர். காப்புக்கட்டி விழா ஆற்றும்போது,