பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நல்லவை ஆற்றுமின் தெய்வத்துக்கு அஞ்சித் தீயன செய்யாது அவர்கள் தங்களைக் காத்துக் கொள்வர். பொங்கல் விழா போன்ற எல்லா விழாக் களும் சமுதாய விழாக்களாவே இருக்கும். தனியார் விழா வாக வீட்டில் நடப்பதாக இராது. தெய்வம் வந்து வாக்கிசைத் தால் அது சொல்லியபடி நடக்கும் என முழுக்க முழுக்க நம்பு கிறார்கள்-அது பெரும்பாலும் உண்மையாகவும் உள்ளது. தெய்வ நம்பிக்கையால்தான் நரைதிரை, மூப்பு தங்களுக்குச் சீக்கிரம் வருவதில்லை எனத் திட்டமாக ,நம்புகின்றனர் அப்படியே சிலர் நல்ல வயதாகியும் அவை இன்றி இருப் பதைக் கண்டேன். தெய்வத்துக்கு அடுத்து அவர்கள் பச்சிலை களையே தம்நோய் நீக்கும் மருந்தாக நம்பி வெற்றியும் பெறு கின்றனர். நம்நாட்டுச் சித்த வைத்திய மரபுகள் நாட்டிலெல் லாம் அருகி வந்த போதிலும் அந்தக் கல்லா மாக்கள் அந்த முறையைப் போற்றுவது கண்டு மகிழ்ந்தேன். இனி அவர்கள் மொழி அமைப்பில் உள்ள சில பண்பாட்டு மரபினையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சிலருடைய பெயர்கள் மாண்பன், மாண்பி, நஞ்சன், நஞ்சி, வீரன், வீரி, சீர்த்தன், சீர்த்தி என உள்ளன. நஞ்சன், நஞ்சி என்பன சிவன், சக்தியின் பெயர்கள் என்பர். அவர்கள் பெயர் அமைப் பிலேயே மாண்பும், இறைத்தன்மையும் வீரமும் சீர்த்தியும் விளங்குகின்றன. பெரியோர்களை மூப்பர் என்றே அழைப் பதை முன்னரே குறித்துள்ளேன். விழாக்களை ஒட்டுக் கவா-ஒட்டாய்வாரா என்ற பெயர்களாலே அழைக் கின்றனர். இதனால் அவர்தம் விழாக்கள் அனைத்தும் அனை வரும் ஒட்டுமொத்தமாக வந்து ஆற்றுவனவாகவே அமை கின்றன என்பது புலனாகும். மற்றவர் கொடுமை என்ன செய்தாலும் அவர்களைப் பழித்துரைக்கும் மரபு சிலரிடம் காண முடியாதது. சிவசாரத்தால் தம்மிக்க துன்ப எல்லையில் கூறுவது நீரா என்ற சொல் ஒன்றேயாகும், இதற்கு விளக்கம் கேட்டபோது அவர்கள் தமக்குத் தீங்கிழைத்த