பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கல்லவை ஆற்றுமின் கையோடும், மொழி அறிவோடும், பிற நல்லியல்புகளோடும் தத்தம் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் அமைத்துக் கொண்டு வாழ்கின்ற நிலைகாண நல்லவர் உள்ளம் மகிழும். நாமும் மகிழ்வோம். ஆம் நாகரிக மனிதனால் விடப்பெற்ற எத்தனையோ பழக்க வழக்கங்களும் மரபுகளும் நம்பிக்கைகளும் மொழி மரபுகளும் இக்கல்லா மக்களால் போற்றிக் காப்பாற்றப் பெற்று அவை அங்கே வாழ்ந்து வையத்து மனிதப் பண்பு இன்னும் வற்றிவிடவில்லை என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன. அரசாங்கங்களும் அறிஞர்களும் இத்துறையில் இன்னும் கருத்திருத்த வேண்டும். கல்வி நலம் கண்ட கற்பகம் என்னை நான் நன்கு உணராத அந்த இளமைக்காலம். ஊரில் ஐந்தாம் வகுப்பு முடித்து விடுமுறையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தேன். நெற்றியில் திருநீறும் சந்தனப் பொட்டும் துலங்க ஒருவர், வேறு இருவருடன் நாங்கள் விளையாடும் இடத்துக்கு வந்தார். எங்களுடன் ஏதோ பேசினார். என்னை அழைத்துக்கொண்டு என் வீட்டிற்குள் வந்தார். என் அன்னையாருடனும் பாட்டி யுடனும் ஏதேதோ பேசினார். பிறகு என்னைப் பார்த்து வாழ்த்தி, முதுகில் தட்டிக் கொடுத்துச் சென்று விட்டார். எங்களுர் அங்கம்பாக்கம். பாலாற்றங்கரையில் தென் புறம், வடகரையில் உள்ளது வாலாஜாபாத். அதில் உள்ளது இந்து மத பாடசாலை என்னும் மாணிக்கவாசகர் சபை'யைச் சேர்ந்த அப்பள்ளிக்கூட்டத்தின் நிறுவனர் அவர் என்றும் அவர்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பில் என்னைச் சேர்க்குமாறு