பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி நலம் கண்ட கற்பகம் 135 அன்னையிடம் சொல்லிச் சென்றார் எனவும் அறிந்தேன். அப்படியே வேறு சில பெற்றோர்களையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார். அவ்வாறே வாலாஜாபாத் சுற்றிலுமுள்ள எல்லா ஊர்களுக்கும் சென்று இளங்குழந்தைகளை அழைப் பாராம். இளந்தாடி, இனியமுகம், இன்சொல் இவை கலந்த அவர் தோற்றத்தில் நான் ஈடுபட்டேன். அடுத்த சூனில் அவர் பள்ளியில் சேர்ந்தேன். அந்தக் காலத்திலேயே இவரைப் போன்று, கல்வியில் ஆக்கங் காட்டிய நல்லவர்-பெரியவர் வேறு யாரும் இலர் என்று எண்ணினேன். அன்று மிகச்சிறிய பள்ளியாக எட்டாம் வகுப்பு வரையில் சுமார் இருநூறு மாணவர்களுடன், விடுதி ஒன்றும் இல்லாமல் "மாணிக்கவாசகர் சபை' என்ற நிறுவனத்தின் அடிப்படையில் அமைந்ததே இந்து மத பாடசாலை. சபையின் சார்பில் நடைபெற்றதால் அது சபை பாடசாலை’ எனவே அன்று அழைக்கப் பெற்றது. (1924-25) அதன் நிறுவனர் வா. தி. மாசிலாமணி முதலியார் அவர்கள் வாலாஜாபாத் தியாகராஜ முதலியாரின் திருமகனார். எட்டாம் வகுப்பு வரையில் பயின்று, ஆசிரியர் பயிற்சியும் பெற்றவர். உண்மையிலே வாழ்வைத் தியாகம் செய்து, கல்வி வளர்ச்சியிலே முற்றும் கருத்திருத்தி, ஏழை மக்களைத் தாமே ஊர்தோறும் நாடிச் சென்று, தாமே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண் டருளும் இறைவனைப் போன்று, பிள்ளைகளைக் கூட்டி வந்து பள்ளியில் படிக்க வைத்தார். அவரும் அவர்தம் பள்ளியும் இல்லையானால் என் போன்ற ஆயிரம் ஆயிரம் மக்களின் வாழ்வு மண்ணோடு மண்ணாய்க் கலந்து போய் இருக்கும். இந்து மத பாட சாலையில் பயின்ற மாணவர் இன்று நாடெங்கினும்-ஏன்-உலகெங்கினும்கூட இருக்கிறார்கள் என்லாம். சிலர் உயர் பதவிகளிலும் இருந்தனர்-இருக்