பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி நலம் கண்ட கற்பகம் 137 கொண்ட செம்மையும் வளர்த்து வளர்ந்து இன்று அவர் பெயரிலேயே மேநிலைப்பள்ளியாக உயர்ந்துள்ளது. அரசாங் கங்கள் தொழிற் கல்வியைப் பற்றி எண்ணியே பார்க்காத அந்த நாளில், கல்வியொடு தொழிற்கல்வியை இணைத்து. பாய்முடைதல், நெய்தல், நூல்நூற்றல், அச்சுக்கோத்தல், அச்சிடுதல், நூல்கட்டுதல் (binding), உழவு, பொத்தான் செய்தல் போன்ற பல தொழில்களைக் கல்வியொடு இணைத்து, மாணவர் அவற்றைக் கட்டாயம் பயிலும் திட்டத்தின்ை வெற்றிகரமாக அப்பா அவர்கள் செயலாக் கினார். எனவே தொழிற்கல்வியில் தந்தை-அப்பா'- எனப் பொருந்தும். ஒருநாள் மாலை அப்பா, பெரியப்பா இருவரும் ஊரில் இல்லை. 1934-35 என எண்ணுகிறேன். அன்று அப்பள்ளியில் நானும் பணிபுரிந்தேன். இன்றைய செயலாளர் அண்ணா தணிக்ை அரசு அவர்களும் அந்த ஆண்டில்தான் அங்கே ஆசிரியர் பணியினை ஏற்றார். எங்களிடம் அப்பா அவர்கள் log/ இடத்தில் நல்லதொரு நாளில் குடி புக வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். அவர்கள் ஊரில் இல்லாத அந்த நாள் மிக நல்ல நாளாக எங்களுக்குப்பட்டது, உடனே நானும் அண்ணாவும் நல்ல வேளையில்-அந்தப் புதிய இடத்தில் இருந்த பழைய கட்டடத்தில் பால் காய்ச்சி, பலகாரம் செய்து, பலருக்கும் கொடுத்து உண்டோம். வாழ்வு தொடங்கப் பெற்றது. எனினும் அப்பா' என்ன சொல்வார்களோ என்ற அச்சம் இருந்தது. அவர் ஊருக்கு வந்ததும் அவரிடம் நடந்ததைக் கூறினோம். அவர் உடனே மகிழ்ந்து தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்கள். உடனே வேறிடத்தில் இருந்த விடுதியினை அங்கே மாற்றச் செய்தார் கள். பெரியப்பாவும் மகிழ்ந்தார்கள். ஆம்! அந்த இடமும் அதன் சுற்றிலும் பின் பெற்ற இடங்களுமே இன்று அவர் 9 س-5