பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - கல்லவை ஆற்றுமின் அவ்வளவாகக் கெடுதலே இல்லை; அவர்களால் அதிகமாகச் செயலாற்றவும் முடியாது. ஆனால் தாழ்ந்தோர் உயர்ந்தோ ராகி-அதிகாரமும் கிடைக்கப் பெற்றால் அதனால் அவருக்கு மட்டுமன்றி, அவர் செயலாற்றும் நாட்டிற்கும் நலமோ கேடோ அமைவது இயற்கை. எனவே நல்லவர் உயர்வு நாட்டிற்கும் உலகுக்கும் நன்மை உண்டாக்கும் என்பதும் அல்லவர் உயர்வு அவருக்கு மட்டுமன்றி, சமுதாயத்துக்கே தீங்கு விளைவிக்கும் என்பதும் யாரும் அறிந்த உண்மை, ஒருசிலர் தங்கள் பதவியோ செல்வநிலையோ எவ்வளவு உயர்ந்தாலும் அதனால் இறுமாப்போ-ஏமாப்போ கொள் ளாமல் தம்முன்னைய நிலையினையும் சுற்றியுள்ள சமூகத்தின் நிலையினையும் எண்ணி, அமைந்து, தம் உயர்வாலும் வளத் தாலும் உலகுக்கு என்னென்ன நன்மைகள் செய்யலாம் என ஆய்ந்து செயல்படுவர். ஒருசிலர் அத்தகைய ஆக்கப்பணி செய்யா நிலையில் இருப்பினும், தம் உயர்வின் செருக்கால் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள். பிறரைச் சிறுமைப்படுத்திச் சிறுசொல் சொல்லமாட்டார்கள். ஆனால் அற்பர்களுக்கு வாழ்வுவந்தால், அந்த வாழ்வின் செருக்கால் அவர்கள் கெடுவதோடு, சமுதாயத்தையும் கெடுத்து, பல கொடுமைகளைச் செய்வார்கள். அவர்கள் கொடுமைகள் எந்த அளவுக்குச் செல்லும் என்பதை நாலடி ஒர் உவமையால் விளக்குகிறது. இந்திரன் தன் நிலையில்லாத பதவியின் செருக்கால், சமூக நெறிக்கே மாறுபட்டதாகிய மற்றவர் மனைவியை அடையும் கொடுமையினைச் செய்து நிலை கெட்ட வரலாறு உலகறிந்ததே. அதனால் அவன் அடைந்த இழிநிலையும் எண்ணத்தக்கதே. அதுமட்டுமன்றி ஆணவத் தால் எத்தனை அறவோரை அல்லல் படுத்தினான் என்பதும் இலக்கியம் காட்டுவதே. இதை எண்ணியே நாலடியார் 'முந்திரிமேல் காணிமிகினும் கிழ் தன்னை இந்திரனாய் எண்ணி விடும் என்று நல்ல வகையில் விளக்சம் தருகிறது.