பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கல்லவை ஆற்றுமின் பெயரால் 'மாசிலாமணி நகர்' என்று அழைக்கப்பெறும் சிற்ப்பின்ைப் பெற்றுள்ளது. மறவாதிருந்தும், நற்றவா உனை நான் மற்க்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்று அடியவர் இறைவ னோடு இயைந்த தொடர்பினைக் கூறியபடி அப்பா அவர்கள் மறந்தாலும்-இவரும் மறக்கவில்லை-இவர் உடல், உள்ளம், நா அனைத்தும் பள்ளியைப் பற்றி எண்ணி, பேசி, செயலாற்றி இந்த நிலையில் இதை வளர்த்துள்ளது. இரவு 9 மணிக்குச் சென்னையிலிருந்து வந்து, அந்த வேளையில் மாணவர் உணவகம், உ றங்குமிடம், அட்டிற்சாலை, பண்டகச் சாலை, பள்ளி அலுவலகம் அனைத்தையும் இரவு பன்னிரண்டு மணிவரையில் பார்த்து, வரவு செலவுகள் பற்றிக் கேட்டறிந்து - தேவையாயின் கண்டு, உணர்ந்து, வேண்டுவன தந்து படுப்பார்-ஆம்! வெறும் ஒட்டுத்திண்ணையில் பாயில் படுத்து உறங்குவார். விடியல் நான்கு மணிக்கு முன் எழுந்து, மறுபடியும் அனைவருடனும் மேல் நடக்க வேண்டியவற்றைப் பற்றிப் பேசி, குளித்து, நடராசரைக் கும்பிட்டு வெறும் கஞ்சியினை வழியில் குடித்துக் கொண்டே காலை 6:20க்கு இரயில் ஏறிச் சென்னைக்குச் செல்வார். அவர்தம் உயிர் ஒப்பந்தப் பணியும் மக்களை அறிமுகமாக்கி அழைத்து வந்து பள்ளியினைக் காட்டும் செயலும், பள்ளி, விடுதி பற்றிய மானியம் முதலியன பெற வழிகாணும் வகையும் அவரைப் பெரும்பாலும் சென்னை வாசியாகவே ஆக்கிவிட்டன. ஆயினும் அவர் உள்ளம் இந்து மத பாடசாலை இருக்கும் இடத்தினையே எண்ணிக் கொண்டிருக்கும். அவர் வளர்த்த அந்த அற நிலையம் இடைப்பட்ட முட்டுக் கட்டையினைக் கடந்து இன்று அவர் பெயராலேயே மேநிலைப் பள்ளியாக உயர்ந்துள்ள நிலையினை எண்ணி மகிழ்கின்றேன்-அவர் எங்கிருந்தாலும் அவர் ஆவி பள்ளியிலேயே சுழன்று கொண்டு இருக்கும். ஆதலால் அப்பள்ளியினை நோக்கி வணங்குகின்றேன்.