பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி கலம் கண்ட் கற்பகம் 139 அரசியலை விட்டு நெடுந்துாரம் விலகி இருக்க வேண்டும் என்று பலருக்கும் அப்பா சொல்வார்கள். ஆனால் 1927-28இல் ஏனோ அவர்களே மாவட்ட்க் கழகத்துக்குப் போட்டி இட்டார்கள், இன்று போல, 18 வயது பெற்ற யாவருக்கும் வாக்குரிமை இல்லாத காலம் அது. வரிகட்டுவோருக்கே வாக்கு, அப்பா அவர்கள் பலப்பல வகையான பிரசுரங்கள். சுவரொட்டிகள் அடித்து வழங்கி, ஒட்டி, ஊர்தோறும் சென்று வாக்கினைக்கேட்டிார்கள். என் அன்றைய பிஞ்சு உள்ளமும் (நான் மாணவன்) அவர் அலைச்சலைக் கண்டு கண்ணிர் வடித்தது. அவர் வெற்றி பெறவில்லை. ஆனால் அதுவே அவர்தம் கடைசிப் போட்டியாகவும் அமைந்தது. அவர் எந்தக் கட்சியினையும் சார்ந்தவரல்லர். சைவ சமயத்தவ ராயினும், அதை வளர்ப்பவராயினும் பிற சமயங்களையும் ஆதரித்தே வந்தார். சாதி மத வேறுபாடற்ற வாழ்க்கை அவருடையது. நான் அவருடன் பழகிய காரணத்தினாலே சாதிப்பற்றையும், சாதிப்பெயரையும் விட்டதோடு, பல சீர்திருத்தங்களையும் மேற்கொண்டேன். என் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளிலெல்லாம் அப்பா அவர்கள் தோள் கொடுத்து என்ன்ைத் தூக்கிவிட்ட நிலையினை எண்ணி நிற்கின்றேன். இன்று என் அன்னையின் பெயரால் குழந்தை கள் பள்ளி முதல் கல்லூரி வரையில் சிறந்த வகையில் நான் நடத்துகிறேன் என்றால் அதற்கு என் உள்ளத்தில் 'வித்திட்டவர் அப்பா அவர்களே. இன்று இருந்தால் என் செயல் கண்டு கட்டித்தழுவி மகிழ்ந்து வாழ்த்துவாரே என் ஏங்குகிறேன். நான் ஐதராபாத்திற்கு, தமிழக அரசின் ஆணை வழியே பேராசிரியர் பொறுப்பேற்கச் சென்ற நாளில் பெருவிழா நடத்தி, பள்ளி மலராகிய 'குருகுலத்தின் மேலட்டையில் என் படத்தினையும் உள்ளே என் வாழ்க்கையினையும், அச்சிட்டு, என்னை வழியனுப்பினார். ஆனால் நான் திரும்பி வந்த