பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நல்லவை ஆற்றுமின் போது 1967 ஏப்பிரலில் அப்பா அவர்கள் நோய்வாய்ப்பட்டு, டாக்டர் சுந்தரவதனம் மருத்துவமனையில் படுக்கையாக இருந்தார். அவருக்கு உற்றவராக, பள்ளிவளர்ச்சியில் கருத்து டையவராக இருந்த ஒரு சிலருள் டாக்டர் சுந்தரவ்தனமும் ஒருவர். செங்கற்பட்டு மேலமையூர் வேதாசல முத்லியார், காஞ்சிபுரம் குமரன் பிரஸ் உரிமையாளர் குப்புசாமி முதலியார், ஆக்கூர் சண்முக முதலியார், ஐயங்கார் குளம் இலட்சுமண முதலியார், மேனல்லூர் கிருஷ்ண்சாமி முத்லியார், சென்னை மாணிக்கச் செட்டியார், மணி கோட்டீஸ்வர முதலியார், மதறாஸ் பளைகாட் கம்பெனி உரிமையாள்ர் அனைவரும் பள்ளி வளர்ச்சிக்கு அப்பாவுக்கு வேண்டுங்காலத்து உதவியவர்கள். டாக்டர் சுந்தரவதனம் மருத்துவமனையில் நான் சென்ற போது, அவர்களால் அதிகமாகப் பேச முடியவில்லை. அதற்கு முன்பே பள்ளியைப் பற்றியும் அதன் வருங்காலம் பற்றியும் ஓர் ஆவணம் எழுதி வைத்திருந்தார். வருங்காலத்தில் தான் தொடங்கியது. நன்கு வளர, சில நல்லவர்கள் அமைந்த ஒரு குழுவினை அமைத்திருந்தார். எனினும் மருத்துவமனையில் இருந்தபோது, அவர் முற்றும் நம்பிய ஒருவரால் அந்த ஆவணம் மாற்றி எழுதப் பெற்றது. உடன் அப்பா அவர்கள் உயிரும் பிரிந்தது. நானும் வாலாஜாபாத் சென்று அவர் இறுயாத்திரையில் கலந்து, கண்ணிர் உகுத்து, கசிந்து நின்றேன். ஆவண மாற்றத்தால் அமைதியாகத் தொடர்ந்து நடக்க வேண்டிய பள்ளிக்குச் சில தடைகள் உண்டாயின. பள்ளியே மூடும் நிலைக்குச் சென்றது. எனினும் இறைவன் அருளாலும் சென்னையில் இருந்த கல்வித்துறையில் ஒருவ்ர், கோட்டை யில் இருந்த ஒருவர் ஆகியோர் உடன் துணையாலும், ஊரில் இருந்த நடராச முதலியார் (அப்பா அவர்தம் சிறிய