பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவு கனவாகியது f 43 பயிலும் ஒவ்வொருவரும் தனித் தனியோ கூட்டாகவோ ஒவ்வொரு கிராமத்தினைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஓராண்டு அங்கேயே சென்று அக்கல்லா மக்களோடு கலந்து வாழ்ந்து, அவர் உண்பன உண்டு உடுப்பன உடுத்து, உழைத்து அவர்களை நல்லாற்றுப்படுத்தியபின்பே பட்டம் பெறத் தகுதி யாவர் என்பதே அச்சட்டத்தின் அடிப்படை. அதற்குரிய பாத்திரங்களை அமைத்து, அதை நாடக வடிவில் ஆக்கி 1950இல் வெளியிட்டேன். அன்று நான் கண்ட கனவு. இன்று நனவாவதை நோக்கி மகிழ்கின்றேன். அன்று அந்த நூலுக்கு முன்னுரை வழங்கிய முன்னாள் தமிழக முதல்வர் உயர்திரு. மீ. பக்தவத்சலம் அவர்கள் குறிப்பிட்டுள்ளதையும் இங்கே காட்ட விரும்புகிறேன். "கிராம முன்னேற்றமின்றி நம்நாடு உயர்நிலை அடையாது என்பது யாவரும் உணர்ந்து ஒப்புக் கொள்ளும் விஷயம். ஆனால் அதைச் சாதிப்பதில் கவனம் செலுத்த வழி தேடவேண்டும். இத்தொண்டில் தான் ஆசிரியர் ஈடுபடுகிறார். கிராமத் தொண்டின் அவசியத்தை நிர்ப்பந்தமாகவே வற்புறுத்த வேண்டு மென்பதை இந்நூலில் எடுத்துக் காட்டுகிறார். நிர்ப் பந்தமே ருசியை உண்டாக்கும் என்பது ஆசிரியர் கோட் பாடு. கிராமச் சீர்த்திருத்த வேலையே குடியரசு கவனம் செலுத்த வேண்டிய முதல் விஷயம் என்பதைத் தம் நூலின் பெயரினால் ஆசிரியர் விளக்குகிறார். குடியரசு பெற்ற நாட்டை நிர்மாணிக்கும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கும், குடியாட்சி உரிமை பெற்றும் நாட்டின் நிலைமை மாறாதது கண்டு ஏங்குபவர்களுக்கும் இந்நூல் நல்ல சிந்தனைய்ைக் கிளப்பக் கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்”