பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகள் கல்வி 145 மக்களிடையில் பரவவேண்டும். நல்ல மாணவர் சமுதாயம் மேற்கொள்ள இருக்கும் இந்த சமுதாயத் தொண்டின் அடிப்படையில் அமையும் கல்வி முறை அவர்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்பது உறுதி. நம்நாடு கிராமங்களால் ஆனது; உழவுத்தொழிலை அடிப்படையாகக் கொண்டது. ஆயினும் இதுவரை கிராமங் களையும் அவற்றின் உழவுத்தொழிலையும் நாடாளுபவர் கவனிக்கத் தவறிவிட்டனர். எனவேதான் தற்போது எண்ணற்ற அல்லல்களை நாம் ஏற்க வேண்டியுள்ளது. எனினும் இன்றைய எழுச்சியும் உணர்ச்சியும் சமுதாயத்தைத் தட்டிஎழுப்பும் வகையில் அமைந்து செயல்பட்டு வரத் தொடங்யுள்ளதைக் காண மகிழ்ச்சி பிறக்கிறது. அச்செயல் முறையுள் ஒன்றே பயின்று பெறும் பட்டத்துடன் சமுதாயத் தொண்டை இணைப்பது. இந்த ஆக்க நெறிக்கு வழிகோலிய சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தரைப் பாராட்டு கிறேன். இந்திய நாட்டு எல்லாப் பல்கலைக் கழகங்களும் இந்தச் சமுதாயத்தொண்டின் அடிப்படையில் பாடத்திட்டம் அமைக்க முற்பட வேண்டும் எனக் குறிப்பிட வேண்டுகிறேன். வருங்கால மாணவச் சமுதாயம் இத்திட்டத்தை ஏற்றுத் திறம்படச் செயலாற்றுவதோடு தம் நாட்டையும் வீட்டையும் உயர்த்தி, தங்கள் வாழ்வையும் உயர்த்திக்கொள்ள முயல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க மாணவர் தொண்டு! வளர்க சமுதாய நலன்! குழந்தைகள் கல்வி உலகமெல்லாம் கல்வி வளர்ச்சி பற்றிய கருத்து அதிக மாக வளர்ந்து வருகிறது. நம் பாரத நாட்டிலும் அத்தகைய நிலை வளர்ந்து வருவது பாராட்டுதற்குரியது.