பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவை, உயர்ந்த குறிக்கோள் 453 இராம - அரசியல் ஈடுபாடு, ஒன்றிய உணர்வு(Integration) இன்மை, அனைவருக்கும் உத்தியோகம் என்ற எண்ணம். சண்முக - குருகுலவாசமுறை இன்று-மாணவ ஆசிரியர் தொடர்பும் பொருத்தமும். 4. இவை நீங்க வழிகளை நீங்கள் காட்டமுடியுமா? சண்முக - ஒழுக்கக்கல்வி அடிப்படையாக அமைதல், . மாணவர் ஆசிரியர் தொடர்பு வளர்ச்சி. இராம - அறநெறி பற்றிய படிப்பு (Moral instruction) கட்டாய வற்புறுத்தல் இன்மை. - அயூப் - பொருளாதார ஏற்றத்தாழ்வு அறியாக் கல்வி முறை, எந்த வேறுபாடும் காட்டாத கல்வி நிலை. . நீங்கள் கண்ட இந்த ஆய்வின் முடிவை எண்ணும்போது மாணவர்களுடைய உயர்ந்த நிலை நன்கு புலப்படுகின்ற தல்லவா. மாண்பு' என்ற நல்ல இயல்பினைப் பெற்றவர் மாண்வராவர். நவ்ரத்தினங்களில் சிறந்தது மாணிக்கம்; சமுதாயத்தில் சிறந்தவர் மாணவர். மாணவர் என்ற சொல்லுக்கே அழகியவர் என்ற பொருள் உண்டு. எனவே புறத்திலும் அகத்திலும் அழகுணர்ச்சி பொங்க, அந்த அழகிய பண்பாட்டின் வழியே நல்ல குறிக்கோள் மாணவர் உள்ளத்தில் உருவாக வேண்டும். நல்ல குறிக்கோள்சிறப்பாகப் படித்தவர் அல்லது படிக்கின்றவர் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள் என்ன என்பதை மூவரும் நன்கு விளக்கினார்கள். பயிலும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கை சமுதாயத்துக்கே என்ற உணர்வில், தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பண்பாட்டில் வாழக் கடமைப் பட்டவர்கள். வள்ளுவர் இதையே, - ந-10