பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக் கல்விமுறை நன்கு அமைவதாக 159 பயில வாய்ப்பளித்தால்தான் ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வு களில் உயர்ந்த இடம் பெறமுடியும். அதற்கு அரசாங்கம் நேரிய வழியினை வகுக்க வேண்டும். மேலும் ஐ.ஏ.எஸ்’ தேர்வினை ஆங்கிலத்திலோ அன்றி இந்தியிலோ எழுதலாம். அவரவர் தாய் மொழியிலும் கூட எழுதலாம் என நினைக் கிறேன். ஆனால் தமிழ் நாட்டினர் யாரும் தமிழில் எழுதுவ தில்லை. வட நாட்டவர் இந்தியில்-தாய்மொழியில் எழுதி அதிக இடங்களைப் பெறுகின்றனர். இதற்கு யார் பொறுப்பு? மாணவரா? அரசாங்கமா? கல்வித்துறையா? ஆய்வு தேவையா? இனி. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் படிப்பிற்கும் பின் அவர்கள் ஏற்கும் பணிக்கும் தொடர்பு உள்ள வகையில் அரசாங்கம் வகை காண வேண்டாமா? இரசாயனம், பெளதிகம் போன்றவற்றுள், பல ஆயிரம் செலவு செய்து, முதுகலை (M.Sc.) பட்டம், எம்.ஏ போன்ற பட்டங்களைப் பெற்றவர்கள் சாதாரண குமாஸ்தா உத்தியோகத்துக்குப் பத்தாவது படித்த மாணவரோடு தேர்வு எழுதுகிறார்கள். அரசாங்கத்தேர்வு ஆணைக்குழு, இன்றுள்ள தேர்வுக்கு இன்னின்ன அளவு படிப்பு இருக்க வேண்டும் என வற்புறுத்துவதோடு, அதற்கு மேல் படிப்பில் பட்டம் பெற்றவர்களையும் விலக்க வேண்டும். இல்லையானால் எத்தனை மண்டல் கமிஷன் வந்தாலும், அடிமட்டத்தில் உள்ளவருக்கு வாய்ப்பு இல்லை. இதற்கு அடிப்படையாகக் கல்வி முறையிலேயே திருந்திய ஏற்பாடு செய்ய வேண்டும். பத்து அல்லது பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் பல வகையில் மாணவர் பிரிந்து பட்டப்படிப்புகளை மேற்கொள்ளு கின்றனர். அப்பிரிவுள் ஒன்றாக அரசாங்க ஊழியத்துக்கும் அதன் சார்புடைய பிறவற்றிற்கும் உரிய எழுத்தர் முதலிய பத்விகளுக்கு உரித்தான வகையில் பாடதிட்டங்களை