பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கல்லவை ஆற்றுமின் தரம் குறையுமே! இக் குறைகளையெல்லாம் அரசு நீக்க உடன் ஆவன செய்ய வேண்டுகிறேன். . . இன்றும் எத்தனையோ கருத்துக் கோவை உள்ளத்து எழுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவற்றை என்னுடைய புதிய கல்வி முறை என்ற நூலில் எழுதியுள்ளேன். நான் அப்போது தமிழக மேநிலைக் கல்விக் குழுவின் உறுப்பினராக இருந்தேன், என் வாழ்நாள் முழுதும் கல்விப் பணியிலேயே செலவிட்டேன். எனவே கல்வி - நாட்டுக் கல்வி-நல்ல வகையில் வருங்காலச் சந்ததிக்குப் பயன்படும் வகை யில்-நாட்டுப் பொருளாதார நெருக்கடி நீங்கும் வகையில்எல்லாரும் எல்லாச் செல்வமும் வாழ்வும் பெறும் வகையில் அமையவேண்டும் எனக் கனவு காண்கின்றேன். அதனாலேயே ஓரிரு மாதங்களுக்கு முன் தொலைக்காட்சியினர் புதிய மத்திய அரசாங்கம் கல்விக்கு ஆற்றிய தொண்டு பற்றிக் கேட்டபோது, மக்கள் வாழ்வுக்கேற்ற கல்விக்கு ஒன்றும் செய்யவில்லை-செய்ய நினைக்கவும் இல்லை என்று கூறினேன். அது தில்லி அரசாங்கத்தின் செவிகளிலும் விழுந் திருக்கும். அங்குள்ள மத்திய தொலைக்காட்சி நிலையத்தில் அதைக்காட்டப் போவதாகச் சொன்னார்கள். இங்கும் காட்டினார்கள், கல்வித்துறையில் காலமெல்லாம் கழிக்க நல்லவர் துணைக் கொண்டு-அத்துறையில் வல்லாரை வழிகாட்டியாகக் கொண்டு நாடு நலம்பெற-நல்வாழ்வு மலரத்தக்க கல்வி முறையினை வற்புறுத்தி மத்திய, மாநில அரசாங்கங்கள் ஆவன செய்யும் என்ற நம்பிக்கையோடு இக்கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன். நல்லனவாயின் கொள்க! அல்லனவாயின் மன்னியுங்கள். நாடு நன்கு வாழ வேண்டு மென்ற நினைவிலே தோன்றிய சிந்தனைகளே இவைஎண்ணிச் செயல் புரிக! ஏற்றம் காண்க!