பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நல்லவை ஆற்று மின் சேர்ந்தவனைக் காண, அவனை அப்புரவலர் அல்லது அரசர் பால் சென்று பயன்பெற ஆற்றுப்படுத்துவது-வழி காட்டுவது ஆகும். (ஆறு-வழி) இங்கே நக்கீரர், முருகனை வழிபட்டு, நலமுற்ற ஒரு நல்லடியார், அவ்வாறு பெறாதாரைக் கண்டு அம்முருகன்பால் சென்று நலம் பெற ஆற்றுப்படுத்துகிறார். ஆற்றுப்படை பாடும் அக்கலைஞர் பெயரிலேயே அமைவது மரபு. ஆனால், இது பாடப் பெற்ற முருகன் பெயரில் இருப்பது மாறுபட்டது என்பது ஒரு கருத்து. எனினும் முருகன் அருள்பெற்ற ஒருவன் காணும் எதையும் முருகனாகவே காண்கின்றமையின் எதிர்ப்பட்டவனை முருகன் தோற்றத்தில் கண்டு பாடுவதாகக் கொள்ள இது. பொருந்தும். உலகத்து ஒரு நீ ஆகத் தோன்ற விழுமிய பெய வரும் பரிசில் (வரி 294-95) என அதை நக்கீரரே கூறுகிறார் அதில் முருகன் வாழிடங்களாகத் திருப்பரங்குன்றம், திருச் சீரலைவாய் (செந்தில்) திருஆவினன்குடி (பழநி) திருஏரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (அனைத்து மலையிடங் களும்) பழமுதிர்சோலை (அழகர் கோயில்) ஆகிய ஆறு இடங் களைச் சுட்டினும் இறுதியில் அவன் யாண்டும் நிறைந்து எங்கும் யார்க்கும் அருள்நிலையினை வேண்டுநர் வேண்டி யாங்கு எய்தினர் வழிபட்ட, ஆண்டாண் டாயினுமாகக் காண் தக (வரி 248-49) நிற்பன் என நக்கீரரே கூறுகிறார். இது சங்க இலக்கியத்தொடு சார்த்தப் பெறும் அதே வேளையில் (Ģğ) #6ìf ¢l [)ti ! இலக்கியத்தோடும் சார்த்தப் பெறுகின்றது. இது சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினோராந் திருமுறையில் இடம் பெற்றிருப்பதோடு, நக்கீரரும் நக்கீர தேவநாயனார் எனச் சிறுப்புறுகிறார். இன்று இதை நாள் தோறும் பாராயணம் செய்து பயன்பெறுவோர் பலராவர். இரண்டாவது பொருநராற்றுப்படை (248) முடத்தாமக் கண்ணியார் எனும் புலவர் கரிகாற் பெருவளத்தானாகிய சோழமன்னனைப் பாடியது. பொருநர் என்போர் மற்றவர்