பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப் பாட்டு 23 போல வேடங்கொண்டு ஏர்க்களத்தினையும் போர்க்களத் தினையும் பாடுவோர் என்பர். இங்கே கரிகாலன் போர்க் களத்தினைப் பாடுகின்றமையின் இவர் போர்க்களப் பொருநராவர். இதில் முடத்தாமக்கண்ணியார் கரிகாலனின் வெண்ணிப் பறந்தலைப் போரினைப் பற்றிப் பாடியுள்ளார். மேலும் இப்பாடல் வழியே பொருநர் இயல்பும் பாலை யாழ் சிறப்பும், பிறவும் கூறப் பெறுவதோடு கரிகாற் பெருவளத் தானின் நல்லியல்புகள் பலவும் விளக்கிக் காட்டப் பெறு கின்றன. அவனைப் பாடிய பொருநரும் விறலியரும் பெறும் பரிசுகளையும், பிற புலவருக்கு அவன் பரிசளிக்கும் சிறப்பும் காட்டப் பெறுகின்றன. மூன்றாவது சிறுபாணாற்றுப்பட்ை (269), இசைபாடும் பாணர் சிறுபாணர், பெரும்பாணர் என அவர் யாழ்வழிப் பெயர் பெறுவர். இது சிறுபாணரை ஆற்றுப் படுத்தியது. அடுத்தது பெரும் பாணரை ஆற்றுப்படுத்தியது. இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இதில் ஒப்மா நாட்டு நல்லியக் கோடனைப் பாடியுள்ளார். இவன் ஒரு பெரு வள்ளல். சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்தவன். இவன் நாடு தற்போது தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தைச் சார்ந்ததாகும். இதன் ஆசிரியர் நத்தத்தனார் பிறந்த நல்லூர் காஞ்சிக்குப் பத்துக் கல் (16 கி.மீ) கிழக்கே நத்தன் நல்லூர் (நத்தா நல்லூர்) என இன்றும் உள்ளது. இதில் முடிகெழு வேந்தர் மூவரும், கடைஎழு வள்ளல்களும் மறைந்த பின்பு இவன் அவர்களை ஒத்துப் பெருவள்ளலாக விளங்கிய பெருமை பேசப் பெறுகின்றது, இவன் நாட்டைச் சார்ந்த நெய்தல், முல்லை, மருதம் ஆகிய திணை நிலங்களின் இயல்பும் அவற்றில் வாழ் மக்கள் பண்பும் விளக்கிக் காட்டப் பெறுவதோடு, இந்நல்லியக் கோடனின் வீரம், வள்ளன்மை, புகழ் ஆகியவையும் பேசப் பெறுகின்றன. இதில் கூறப்பெற்ற முருகன் வேலூர் (வரி 174) இன்றும் இளையனார் வேலூர்'