பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கல்லவை ஆற்றுமின் என்ற பெயருடன் திண்டிவனத்துக்கும் நத்தன் நல்லூருக்கும் இடையில் சிறந்து விளங்குகிறது. ஒய்மாநாடு என்பது ஒறுமா நாடு என்றும் வழங்கப் பெற்றதென்பர். நான்காவதாக உள்ளது பெரும் பாணாற்றுப்படை, (500). இதைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இதனால் பாராட்டப் பெற்ற மன்னன் தொண்டைமான் இளந்திரையன். இது பரிசுபெற்ற பெரும்பாணன் மற்றொரு பெரும் பாணனை வழியிடைக்கண்டு ஆற்றுப்படுத்தியது. இளந்திரையன் காஞ்சியில் ஆண்டவன்; சோழர்குலத் தோன்றல். இதன் வழியே காஞ்சிநகரத்தின் சிறப்பனைத் தையும் நன்கு உணர முடியும். அங்கே வாழும் பல்வேறு வகைப்பட்ட மக்களின் பண்பு, வாழ்க்கை முறை முதலியன நன்கு காட்டப்பெறுகின்றன. அந்நகர எல்லையில் கலங்கரை விளக்கம் உள்ளமை பேசப் பெறுகின்றமையின் அன்று இந் நகர் கடன் மல்லை வரையில் (சுமார் 40 கல் அல்லது 64 கி.மீ) பரவி இருந்ததெனலாம். இதற்கொப்ப, இரண்டொரு நூற். றாண்டுகளுக்குப் பின் வாழ்ந்த ஆழ்வார் கச்சிக் கிடந்தவன் ஊர் கடன் மல்லை எனவும் சீனயாத்திரிகள் காஞ்சி இலங்கையை நோக்கிக் கடற்கரையில் உள்ள பட்டினம்’ எனவும் கூறியிருப்பது இதை வலியுறுத்தும். இந்நகரில் இளந் திரையன் ஆண்ட சிறப்பினையும் கொடை நலத்தையும் பிற பண்புகளையும் உருத்திரங்கண்ணனார் பாராட்டுவதோடு அத்தொண்டை நாட்டு ஐந்திணை நலத்தினையும் அழகுறக் காட்டுகிறார். ஐந்தாவது முல்லைப்பாட்டு (103). இதுவே இத்தொகுதி யில் குறைந்த அடிகளை உடையது, அகப்பொருள் பற்றியது. இதனைப் பாடியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணி கனார் மகனார் நப்பூதனார். வெளியே போர் மேற் சென்ற தலைவனைப் பிரிய முடியாது வருந்திய தலைவியைப் பெருமுது பெண்டிர் ஆற்றியிருக்க, வேண்டி அத்தலைவனின்