பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப் பாட்டு 25. போர்க்கள அமைப்பு, பிறவற்றைக் கூறி, அவன் வெற்றித் தேர் வந்துவிட்டது எனக்கூறி, அவளை அமைதிப்படுத்திய, நெறியில் இப்பாடல் அமைகின்றது. இதன்வழி அக்காலத்தில் யானைப் பாகர் வடமொழிச் சொற்களைக் கூறி அவற்றை உண்பித்த நிகழ்ச்சி வழி மொழி இணைப்பினை அறிய முடிகிறது. மேலும் பல்வகைப் பழக்க வழக்கங்களையும். ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். இல்லிருத்தல் முல்லை என்ற இலக்கண முறைப்படி தலைவியின் ஆற்றியிருக்கும் செயலும் அதே வேளையில் தலைவனின் பாசறை நிலையும், ஒருசேரப் படம் பிடித்துக் காட்டும் வகையில் இப்பாடல் அமைகின்றது. ஆறாவது மதுரைக்காஞ்சி (782). இது இத்தொகுதியில் நீண்ட பாடல். ஆசிரியர் மாங்குடி மருதனார். பாடலுக் குரியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன். இவன் இப்புலவரை மதித்த தன்மையினை, 'மாங்குடிமருதன் தலைவனாகப் புலவர் பாடாது வரைக என் நிலவரை' என்ற புறநானூற்று அடிகளில் (72) அறியலாம். அவன் காலத்து அவைக் களத்தே இவர் தலைவராகவும் பெரும் புலவராகவும் திகழ்ந்தார்; மதுரைக்காஞ்சியில் புலவர் நெடிது வாழ்ந்து போர் பல புரிந்து பல வெற்றி கண்டு வீறு பெற்ற நெடுஞ்செழியனுக்கு உலக நிலையாமையினை உணர்த்த இதைப்பாடினார். எனவே இது மதுரைக் காஞ்சியா யிற்று. (காஞ்சி-நிலையாமை) இவன் முன்னோர் திறன் புகழ் முதலியவற்றையும் இவன் பேராற்றலையும் விளக்கி அத் துணையோர் மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோர் (230)திரையிடு மணலினும் பலரே காண் (236) என நிலையா மையை உணர்த்தி மகிழ்ந்தினி துறைமதி பெரும என முடிக் கிறார் புலவர். இப்பாடல் ஒரு வரலாற்றுப் பெட்டகம் என்பர். மதுரையின் நலம்காட்டி, மன்னர் திறன் காட்டி, வைகை வளன் காட்டி, பழம் பெரும். பாண்டிய குல. so—2