பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கல்லவை ஆற்றுமின் முன்னோர் சிறப்பியல்புகளைக் காட்டி, அங்கே வாழும் மக்கள் இயல்பையும் இயற்கை நலத்தையும் காட்டி தம் நீண்ட பாடலை நமக்குத் தந்துள்ளார் மருதனார். ஏழாவது நெடுநல்வாடை (188); பாடியவர் நக்கீரர்; பாடலுக்குரிய தலைவன் நெடுஞ்செழியன். போர்வினை கருதிப் புறஞ்சென்ற பாண்டியனை எண்ணி ஏங்கும் பாண்டிமாதேவிக்கு வாடை வருத்தாது நல்வாடையாக அமையுமாறு அவள்தன் தோழியரும் செவிலியரும் ஆற்றும் நிலையினையும், அதேவேளையில் பாண்டியன் போர்க் களத்தே தம் படைத்தலைவர்களையும் பிறரையும் பாதி நாளிரவில் பரிந்தோம்பும் பண்பினையும் விளக்கி, அவன் தேவியின் துயர் நீங்கப் போர் இன்னே முடிவதாக (168) எனப் பரவும் நிலையில் இதனைத் தனித்திறன் தோன்ற நக்கீரர் பாடியுள்ளார். இது அகப்பாடலாயினும் இதில் வேம்பு தலை யாத்த நோன்காழ் எஃகம் (176) என்ற அடி பாண்டியனைக் குறிப்பதாக அமைவதால் இதைப் புறம் என்பார் உளர். எனினும் போர்க்களத்தே காயமுற்றாரை வேப்பந்தழை நீவி, துயர்நீக்கும் நிலை இன்றும் உள்ளமையின் இதை உலகியல் மேல் நோக்கி, அகமெனவே கொள்ள வேண்டும். (இன்றும் வேம்பு அவ்வகையில் பல புண், நோய், அம்மை ஆகியவற்றிற்குப் பயன்படுவதறிவோம்) எட்டாவதாக அமைவது குறிஞ்சிப்பாட்டு (261). இது 'குறிஞ்சிக்குக் கபிலர்' எனப் போற்றப் பெறும் அப்பெரும் புலவரால் பாடப்பெற்றது. அதிலும் இது தமிழறியா ஆரிய அரசன் யாழ்பிரகத்தனுக்குத் தமிழறியப் பாடியதாகும். அகப் பொருளின் முதலிடமாகிய குறிஞ்சியினை-புணர்ச்சி நிலை யினை விளக்கிக் காட்டியபின் அவன் தமிழறியாதிருப் பானோ! களவொழுக்கம் பற்றியும் அறத்தொடு நிற்கும் திறம் பற்றியும், தலைவன் தலைவி வாயில்கள் பற்றியும் பிற களவொழுக்கம் பற்றிய செய்திகள் பற்றியும் இதில் கூறப்