பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கல்லவை ஆற்றுமின் களால் ஆக்கப்பெற்ற இந்நூல் இலக்கிய வளமும் வரலாற்றுக் கருத்துக்களும் பிறவும் கொண்டு சிறக்க அமைகின்றது. மணிமேகலை துறவு நூல் என்று கொள்ளப்பெறினும், சாத்தனார் இல்லறமே துறவறத்திலும் ஏற்றமுடையது என்பதையும் அவ்வாழ்வில் அமைவார் வழியே வையம் சிறக்கின்றதென்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அப்படியே சாத்தனார் தமக்கு முன் வாழ்ந்த பேரறிஞர் தம் கொள்கைகளையும் வாய்மொழிகளையும் பொன்னே போல் போற்றித் தம் காப்பியத்தில் இடம்பெறச் செய்து, அதை வாழும் காப்பியமாக்கி விட்டார். அவர் காலத்துக்குப் பின் இன்றுவரையில் இலக்கியம் வடிக்கும் எண்ணற்ற புலவர்கள் இச்சாத்தனார் வாய்மொழியினையும் வாரி வழங்கிய கருத்துக் களையும் அப்படி அப்படியே தத்தம் இலக்கியங்களில் ஏற்றிப் போற்றியுள்ளனர். சாத்தனார் வையத்து வாழ்வாங்கு வாழ வேண்டிய சமுதாய நெறிமுறைகளையும், வழக்காறுகளையும், பண்பாடு நாகரிகம் போன்ற பலவற்றையும் தம் காப்பிய வழியே தெள்ளத்தெளியக் காட்டுவதன் மூலம் தாமும் நிலைத்து வாழ்ந்து காப்பியத்தையும் என்றென்றும் வாழ வைத்து விட்டார். மக்கள் வாழ்வுக்கென வகுக்கப்பெற்ற அறங்களைப் டிாத்திரங்களின் வழியே விளக்கும் திறனும்: அவற்றை விளக்கிக் காட்டக் கையாளும் உவமை நலனும், இடையிடை எடுத்தாளும் சிறுகதைகளின் ஏற்றமும் இயைபும், இயற்கையோடு இயைந்த வாழ்வின் எழில் நலம் தோய்ந்த கூறுபாடுகள், வாழ்வியல், அரசியல், சமூகவியல், பொருளியல் ஆகியவற்றின் விளக்கங்களும் இக்காப்பியம் சிறக்கக் காரணமாகின்றன. எனவேதான் சாத்தனார் தம் சமயநெறி விளக்க இதைப் பாடினார் எனக் கொள்ளினும், இது யாவரும் போற்றும் வாழ்விலக்கியமாகி விட்டது. அவர் தம் காப்பிய நயத்தில் இரண்டொன்று கண்டு அமையலாம்.