பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கல்லவை ஆற்றுமின் மரபினைப்போல், மனித உருவில் உள்ள உயிரைப் பிடிப்பதற்கு மனித உருவில் வரும் அந்த முருகன் எல்லா உருவுகளுள்ளும் இருந்து, அவற்றைத் தன்னுள் அடக்கி, அவற்றுக்கு அப்பாலும் யாண்டும் நிறைந்து நிற்கும் தன்மையைக் கச்சியப்பர் பல விடங்களில் விளக்குகிறார். மற்றோரிடத்தில் இந்தக் காதல் காட்சியினைக் குமரற் கீது திருவிளையாடல் போலாம்' (வ. திரு. பாடல் 160) என இவரே குறிக்கின்றார். எனினும் தன் நூலில் இறுதிப்பாடலில் அந்த இறைவனுடைய ஒப்பற்ற எல்லையற்ற-சொல்லுக்கடங்காத-தூய தன்மையினைக் காட்டி, உலகம் அந்தச் செம்பொருள் அடிபற்றிச் சிறக்க வேண்டும் என வாழ்த்தித் தம் நூலை முடிக்கின்றார் கச்சியப்பர். இதோ அவர் பாடல். “பாராகி ஏனைப்பொருளாகி உயிர்ப்பன்மையாகிப் பேராஉயிர்கட்கு உயிராய்ப் பிறவற்றுமாகி நேராகித் தோன்றல் இலதாகி கின்றான் கழற்கே ஆராத காதலோடு போற்றி அடைதும் அன்றே! (வ. திரு. படலம்-267) உலகமும் அதைச் சுற்றியுள்ள பிறவும் அவற்றிற் கப்பாலமைந்த வானமுகடும் பரவிய அண்ட கோளங்கள் அத்தனையும் அவனே. எனவே அத்தகைய பஞ்ச பூதங்கள் ஒன்றிய பாரினைக் கூறி, உடன் அப்பாரில் கலந்த ஏனைப் பொருள்களாகிய-மண் நீங்கலாகிய-நீர், நெருப்பு, காற்று, வான் ஆகியவற்றைக் கூறி அவை அனைத்தும் அறுமுகனே என முதலில் நாம் கண்ணால் காணும் உலகினைச் சான்று காட்டிய கச்சியப்பர் மேலே செல்கிறார். இத்தகைய பரந்த அண்ட கோளத்தில் இப்பூவுலகம் ஒரு சிறு துளி-தூசு, இது போன்று இன்னும் பல உலகங்களில் வாழும் எல்லா உயிரும் அவனே என்கிறார். உயிரில் வேறுபாடு இல்லா நிலையையும் அவைதம் ஒன்றிய உணர்