பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் சிவனருள் யாவினும் அவனருள் 43 கூறுகிறார் சுந்தரர். எனவே காதல் வாழ்விலும் கடவுள் அருள்-சிவனருள் சேர்ந்திருக்கும் தன்மையைச் சேக்கிழார் இங்கே தெளிவாகக் காட்டியுள்ளார். அப்படியே ஞானசம்பந்தர் கருவில் தங்கிய நிலையறிந்த அவர்தம் பெற்றோர், அந்தச் சிறப்பினை, 'ஆளுடையாளுடன் தோணி அமர்ந்த பிரான் அருள்' (திருஞான 21) என்றே போற்றுகின்றனர். பின் பிள்ளையார் பிறந்ததை ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள்பெருகப் (திருஞான 25) பிறந்தார் எனக் காட்டுகிறார். அப்படியே சம்பந்தருக்குப் பாலூட்டி அழுகையை மாற்றி ஞான சம்பந்தராக்கிய நிலை யினைக் கண்மணி நீர் துடைத்தருளிக் கையிற் பொற்கிண்ண மளித்து அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணார் அருள் புரிந்தார் (திருஞான 687) எனப் பாடுகின்றார். அப்பரும் சம்பந்தரும் சீர்காழியில் இணைந்து தோணி யப்பரை வணங்கச் சென்ற நிலையில், சேக்கிழாருக்கு அப்பன் அருளோடு அன்னையின் அருளும் பிணைந்த காட்சி அமைகிறது. இக் காட்சியை ஞானசம்பந்தர் வரலாற்றில் குளக்கரையில் பால் தந்தவிடத்துக் காட்டியுள்ளார். இங்கே திருநாவுக்கரசர் புராணத்தில், 'அருட் பெருகு தனிக்கடலும் உலகுக்கெல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் பொருட்சமய முதற் சைவ நெறிதான் பெற்ற புண்ணியக்கண் இரண்டெனவும் புவனம் உய்ய இருட்கரு உண்டவர் அருளும் உலகமெல்லாம் ஈன்றாள்தன் அருளுமாம் எனவும் கூடத் தெருட்கலை ஞான கன்றும் அரசும் சென்று செஞ்சடை யானவர் கோயில் சேர்ந்தார் அன்றே: (திருநா 185) என்று காட்டுகின்றார். முதலடியில் அருளென்னும் அன்பீன் குழவி' என்ற வள்ளுவர் வாக்கின்படி அன்பினையும் அருளை