பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கல்லவை ஆற்றுமின் நீங்காது நின்று மக்களுக்கு அருள் செய்வான் என்பர். இதுவே கந்தபுராண வரலாறு. வள்ளியைத் தமிழ் மரபுப் படி களவு மணத்தில் கைக்கொண்டான் என்றும் அதுவே அவனைத் தமிழ்க் கடவுளாகக் காட்டச் சான்று என்றும் கொள்வர். முருகன் அகத்தியருக்குத் தமிழ் அருள, அவர் பொதிய மலையிலிருந்து மாணவர் பன்னிருவருக்குத் தமிழ் இலக்கணம் உணர்த்த, அவர்களுள் சிறந்தவரான தொல்காப்பியர் எழுதியதே தமிழில் தொன்மை வாய்ந்த இலக்கண நூலான தொல்காப்பியம் என்பர். தழற்புரை நுதற் கடவுள் தந்த தமிழ் தந்தான் என்ற அடியின்படி சிவனே அகத்தியருக்குத் தமிழை அறிவுறுத்தினான் என்பதும் ஒரு மரபு). தமிழ் நாட்டில்தான் முருகனுக்கு எங்கும் கோயில்கள் உள்ளன. வடக்கே இமயத்திலிருந்து தெற்கே கடல் நடுவில் இருந்த சூரன் மாநகரை நோக்கி வந்தான் என்று கந்த புராணம் கூறினும், அவனுக்குத் தமிழ்நாட்டுக்கு வடக்கே அமைந்த திருத்தணி முதல் தெற்கே திருச்செந்தூர் வரையில் தான் எண்ணற்ற கோயில்கள் உள்ளன. அவற்றுள் சிறந்த வற்றை ஆறுபடை வீடுகள் எனப் பாடுவர் அறிஞர். "குன்றுதோறாடலில் எல்லா மலைகளும் அடங்கும். கடைச் சங்கத் தலைவர் நக்கீரர் திருமுருகாற்றுப்படை என்ற நூலில் ஆறுபடை வீடுகளைப் பற்றியே பாடுகிறார். திருப்பரங் குன்றம், திருச்செந்தூர், திரு ஆவினன்குடி, (பழநி அடிவாரம்) திருஏரகம் (சுவாமிமலை-சிலர் மலை நாட்டில் உள்ள ஒரு தலம் என்பர்) குன்று தோறாடல், பழமுதிர் சோலை (மாலிருஞ்சோலை, அழகர் கோயில்) என்பனவே அந்த ஆறும். இதில் ஐந்தாவதாக வரும் குன்று தோறாடல் என்ற தொடர் முருகன் தங்கிய மலைகள் அனைத்தையுமே குறிக்கும். ஊர் ஊர் கொண்ட சீர் பெறு விழாவில் முருகனை வழிபட்டனர் என்பர் நக்கீரர். காடும் காவும்