பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் 51 கவின்பெறு துருத்தியும், ஆறும் குளமும் வேறுபல வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூம் கடம்பும், மன்றமும் பொதியி னும் கந்துடை நிலையினும் முருகனை மக்கள் வழிபட்டனர் என்பர். அகப்பொருளில் வரும் வேலன் வெறியாடலும் முருகனைப் பற்றியது. மரநிழலில் வேலை நட்டு வழிபடும் வழக்கமும் உண்டு. எனவே மிகப் பழைமையான முருகன் வழிபாடு, முதலில் மலையிலே அமைந்த போதிலும் பின் யாண்டும் நிலவ, எல்லாராலும் எங்கும் ந்ன்கு வழிபடு நிலையில் அமைந்துள்ளது எனக் காண்கிறோம். முருகனுக்குப் பலபெயர்கள் உள. ஆறுமுகன், கந்தன். குமரன், குமரவேள், சாமி, செவ்வேள், சேந்தன், மயிலுர்தி மைந்தன் போன்ற பல பெயர்கள் உடையவன் முருகன். 'முருகன்' என்ற பெயர் முருகு அல்லது அழகு என்ற பொருளின் அடிப்படையில் அமைந்தமை போன்றே, எல்லாப் பெயர்களும் அவனுக்குக் காரணப் பெயர்களாகவே அமை கின்றன. இம்முருகனுக்கு வாகனம் மயில். சூரன் மாமரமாக நிற்க அவனை வேல் கொண்டு பிளந்தான் முருகன். ஒரு பகுதி மயிலாகவும் மற்றொன்று சேவலாகவும் ஆர்த்தெழுந்து வர, அவற்றின் ஆணவம் அடக்கி, சேவலைக் கொடியாகவும் மயிலை வாகனமாகவும் கொண்டான், அதற்குமுன் ஆட்டுக்கிடா அவனுக்கு வாகனமாக அமைந்தது என்பர். முருகன் ஆறுநாள் போரிட்டு ஆறாம் நாளாகிய சஷ்டியில் சூரனை ஆணவம் கெடுத்து வாகனமாகவும் கொடியாகவும் கொண்ட அந்த நாளையே சஷ்டி விரத நாளாகக் கொள்வர். ஆண்டுதோறும் ஐப்பசியில் அமாவாசை முதல் ஆறு நாட் களில் அவ்விழா கோயில் தொறும் நடைபெறும் விழா வாகவும், மக்கள் அனைவரும் போற்றும் விரத நாட்களாகவும் அமைகின்றது. அப்படியே சரவணப் பொய்கையில் 'ாலூட்டி வளர்ந்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும்