பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் 55 இவரது மூன்றாம் வயதில், திருக்கோயிலுக்குச் சென்ற தந்தையாருடன் தானும் சென்றார். இவரைக் குளக்கரை யில் இருத்தி, தந்தையார் நீருள் மூழ்கி நெடுநேரம் வெளிவராமையால், இவர் அழுது நிற்க, இறைவன் உமை அம்மையாருடன் தோன்றி, அவர்தம் பாலுடன் சிவஞானத் தையும் குழைத்து ஊட்டி மறைந்தனர் என்பர். ஞானப்பால் உண்ட உடனே சம்பந்தர் பெற்ற தெய்வப் பெரு நிலையைச் சேக்கிழார், 'சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அங்கிலையில்’ (70) எனச் சிறப்பிக்கின்றார். பின் தந்தையார் வெளிவந்து, பிள்ளை வாயில் பால் ஒழுகவும் கையில் பொற்கிண்ணமும் கண்டு, யார் பால் ஊட்டியவர்?’ என அதட்டிக் கேட்டனர். உடனே சிவஞானம் வரப்பெற்றமையால், 'தோடுடைய செவியன்’ என்ற பதிகத்தைப் பாடி பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே பால் ஊட்டியவர் என உள் கோபுரத்தைக் காட்டி அறிவிக்க, இறையருள் நினைந்து, இவருக்குத் திருஞான சம்பந்தர்’ எனப் பெயர் சூட்டினர். பின் இவர்தம் பெருமை நாடு முழுவதும் பரவலாயிற்று. இச்செயலைத் தம் தேவாரத்திலேயே சம்பந்தர் போதையார் பொற்கிண்ணத்தடிசில் பொல்லாதெனத் தாதையார் முனிவுறத் தான் எனை ஆண்டவன்’ (3-24.2) எனக் குறிக்கிறார். பின், அந்த இளமையிலே தன் தந்தையார் தோளில் அமர்ந்து அருகிலே உள்ள பல தலங்களைத் தரிசித்தார். இறைவனிடமிருந்து பொற்றாளம், பொற்சிவிகை, முத்துக் குடை, முத்துப்பந்தர் போன்றவற்றைப் பெற்று, இளமையில்