பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கல்லவை ஆற்றுமின் பாடல்கள் : (முதல் மூன்று திருமுறைகள்) திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப்பதிகங்கள், சைவத் திருமுறை பன்னிரண்டில் முதல் மூன்று திருமுறைகளாகப் போற்றப் பெறுகின்றன. அவற்றுள் முதல் பாடல் இவர் பாலுண்டு பாடிய தோடுடைய செவியன்' என்பதாகும். இவர் பதினாறாயிரம் பதிகங்கள் பாடினார் என நம்பியாண் டார் நம்பி கூறினும் தற்போது உள்ளவை முன்னுாற்று எண்பத்து நான்கு பதிகங்களேயாகும். தேவாரத் தொகுதியிலே இவர் பாடல்களே அதிகம் உள்ளன. இவர்தம் பாடல்களில் இவர்தம் வாழ்வு பற்றிய அகச்சான்றுகள் பல உள்ளன. மற்றும் இவர் இறையருளை அகத்துறைப் பாட லாகவும் அமைத்துக் காட்டியுள்ளார். அவற்றுள் சிறையாரும் மடக்கிளியே என்பது (1-60-10) சிறந்ததாகப் போற்றப் பெறு கின்றது. இவர்தம் பதிகங்கள் பதினொரு பாடல்களாகவே அமைகின்றன, கடைசிப் பாடல் திருக்கடைக் காப்பாகி நிற்க, அதில் தன்னைப் பற்றிக் கூறி, அப்பதிகம் ஒதுவதால் உண்டாகும் பயனையும் சுட்டுவர். மேலும் எட்டு, ஒன்பது, பத்து ஆகிய பாடல்களில் முறையே இராவணன், திருமால் பிரம்மன் அடிமுடி தேடியநிலை, சமண சாக்கியர் பற்றிய குறிப்புகள் காணப்பெறுவது தனிச் சிறப்பாகும். மற்றும் தாளச் சதி, யாழ் முறி, கோமூத்தரி, மாலை மாற்று, ஏழு கூற்றிருக்கை, ஏகபாதம், நாலடி மேல் வைப்பு, திருமுக்கால் ஈரடி, திருவிருக்குறள் போன்றவற்றையும்-அக்காலத்தில் பிறர் பாடாத வகையில் பாடியுள்ளார். மேலும் பல்வேறு வகைப் பண்களிலே இவர்தம் பாடல்கள் அமைந்துள்ளன. இவர்தம் பாடல்களில் இயற்கை வருணனைகள் மிக்கிருப் பதைக் காணலாம்.