பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நல்லவை ஆற்றுமின் இத் திருக்கோவையாரை இயற்றியவர் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர். பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று இறைவன் கட்டளையிட, அவர் மொழிப்படி இத் திருக்கோவையாரை மாணிக்கவாசகர் பாடினர் என்பர். இவர் தம் திருவாசகத்தே அமைந்த திருவெம்பாவை’ என்ற பாவையும் பிறவும் இவர் தம்மைத் தலைவியாகக் கொண்டு, தலைவனாம் இறைவனை எண்ணிப் பாடியனவாக அமை கின்றன. அதை ஒட்டியே, முழு நூலாக இதைப் பாட வேண்டும் என இறைவன் ஆணையிட்டனர் போலும். மாணிக்கவாசகர் காலம் பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. எனவே இந்நூலின் காலம் பற்றியும் அக்கருத்துக் களைக் காண வேண்டியுள்ளது. இவர் சங்க காலத்துக்குப் பின்னும் தேவாரம் பாடிய மூவருக்கு முன்னும் மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனவும் மூவருக்கும் பிற்பட்டவர் எனவும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. எனினும் முன்னதே ஏற்புடைத்தாகும் என்பது ஆய்வாளர் முடிவு. இக்கோவையாரில் 306, 327ஆம் பாடல்களில் வரகுணன் பற்றிய குறிப்பு வருவதால், பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியன் வரகுணனை இது குறிக்கும் என்றும் எனவே இவர் மூவருக்குப் பின் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் கூறுவர். மேலும் பாமுறையாலும் பிற தொடர் களாலும் இக்கொள்கையினை வலியுறுத்துவர். எனினும் ஆய்ந்து நோக்கின் மூவருக்கு முந்தியும் சங்க காலத்துக்குப் பிந்தியும் தமிழக வரலாற்றில் குறிக்கப்பெறும் இருண்ட காலத்தில் காரைக்காலம்மையார், கோச்செங்கட் சோழர் போன்றார் வாழ்ந்த காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்பது வலியுறுத்தப்பெறும். அந்த இருண்ட காலத்தில் வரகுணன்' என்று ஒருவன் வாழ்ந்திருக்க மாட்டான் என்று எப்படிச்