பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கல்லவை ஆற்றுமின் றம்பலக்கோவையில் குறிக்கப் பெறுகின்றன. எனவே இதை மணிவாசகர் இயற்றினார் எனக் கொள்ளலே பொருந்தும், இந்நூல் சைவத் திருமுறைகளுள் எடடாம் திருமுறையில் திருவாசகத்தொடு இணைக்கப் பெற்று உள்ளமை இக்கருத் தினை உறுதியாக்கும். இனி, இப்பாவை பாவமைப்பில் பிறவற்றொடு ஒன்றாக இருப்பினும் பின் வந்த பல பாவைகளிலும் வேறுபட்டுள்ள தைக் காணலாம். வைப்பு முறையிலும் துறை அமைப்பிலும் இது வேறுபட்டுள்ளது. இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப் பாடு, பாங்கற்கூட்டம் என்ற நிலைமாறி இடந்தலைப்பாடு பின் வருகின்றது; அதுவும் ஒரே பாட்டுடன் முடிகின்றது. வண்டோச்சி மருங்கணையும் துறையும் நாணிக்கண் புதைத் தலும் பாங்கர்க் கூட்டத்தில் உள்ளது. தழைமறுத்தலுக்குப் பல துறைகள் (91.104) உள்ளன. சிலதுறைகளின் பெயர்கள் மாறுபட்டுள்ளன. இன்றும் பலவகையிலும் வேறுபாடுகள் காணலாம். இந்நூல் முதல் வந்த காரணத்தாலே பின்வந்த இலக்கண இலக்கிய அமைதிகளுக்குக் சற்று மாறுபடுவது இயற்கையே. இத்திருக்கோவையார் வெறும் காமநூல் அன்று எனவும் கற்போர் உளத்துக்கு ஏற்ப, இதுவே வேதமாகவும், சிவாகம மாகவும், இலக்கண நூலாகவும், இலக்கிய நூலாகவும் அமையும் எனவும் பின்வந்த ஒரு பாடல் நமக்கு உணர்த்து கிறது. எனவே திருவாசகத்தைப் போன்றே இதுவும் திருவுடை நூலாகும். இதுதான் அப்பாடல். ஆரணங்கான் என்பர் அந்தணர், யோகியர் ஆகமத்தின் காரணங்காண் என்பர், காமுகர் காம கன்னுரல தென்பர்; ஏரணங்காண் என்பர் எண்ணர், எழுத்தென்பர் இன்புலவோர் சீரணங்காய சிற்றம்பலக் கோவையைச் செப்பிடினே!