பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராணம் பெரிய புராணம் சைவ அடியவர்தம் வரலாற்றை விளக்கும் பாநூல். தனி அடியார் அறுபத்துமூவர். தொகை அடியார் ஒன்பதின்மர் ஆக எழுபத்திரண்டு அடியார்கள் வரலாறுகள் இதில் அடங்கியுள்ளன. இதைப் பாடியவர் தொண்டைநாட்டுக் (செங்கற்பட்டு மாவட்டம்) குன்றத் தூரில் பிறந்து, சோழன் அனபாயன் அமைச்சராக இருந்த சேக்கிழார் என்பவர். இறைவனுடைய தொண்டர்கள் பற்றிய வரலாறு ஆதலால், இதற்குத் திருத்தொண்டர் புராணம்’ என்ற பெயரும் உண்டு. இதற்குச் சேக்கிழார் இட்ட பெயர் 'மாக்கதை’ என்பதாகும் எடுக்கு மாக்கதை' என (பாயிரம் 3) அவரே இதற்குப் பெயரிட்டுள்ளார். அதுவே பின் விரிவடைந்து விளங்கும் வகையில் பெரிய புராணம் ஆயிற்று எனக் கொள்ளலாம். இப்பெரிய புராணத்தைப் பாடிய சேக்கிழார் பதினோ ராம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தார் என்றும், பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தார் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. எனினும் திருத் தொண்டர் பாடல்களாலும் (பாயிரம் 8, சண்டேச்சுர நாயனார் 8 புகழ்ச்சோழர் 8) கல்வெட்டுக்களாலும் தில்லை அம்பலத்துக்குப் பொன்வேய்ந்த சோழன் இரண்டாம் குலோத்துங்கன் என அறியப்பெறுதலாலும் அவனே அனபாயன் என அழைக்கப் பெற்றமைக்குச் சான்றுகள் உள்ளமையாலும் அவன் காலமாகிய (1113-1150) பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சேக்கிழார் வாழ்ந்தார் எனக் கொள்ளல் பொருத்தம் என்பது ஆய்வாளர் முடிவு. சோழன் அனபாயன் றந்த சைவனாயினும், அக் காலத்தில் பெரிய சைவ இலக்கியம் (தேவாரம் போன்ற தோத்திரப் பாடல்கள் தவிர்த்து) இன்மையால், சைன