பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராணம் 69 மைக்குச் சான்று பகருவனவாம். இச்சேக்கிழார் வரலாற்றைப் பாடிய கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியர் இந்நூல் வந்த வரலாற்றையும் இதன் பெருமையையும் பலப்பல் பாடல் களால் விளக்கிக் காட்டுகிறார். இந்நூல் ஒராண்டில் சித்திரைத் திங்களில் ஞானசம்பந்தர் ஞானப்பாலுண்ட திருவாதிரை நாளில் தொடங்கப்பெற்று, அடுத்த ஆண்டு அதே நாளில் முடிவுற்றது என்று குறித்துள்ளார் (சேக்கிழார் நாயனார் புராணம் ஊ80). இதன் புகழைப் பாடவந்த உமாபதி சிவனார், ‘கருங்கடலைக் கைநீத்துக் கொள எளிது முந்நீர்க் கடற்கரையின் கொய்மணலை எண்ணி அள விடலாம் பெருங்கடல் மேல் வரும் திரையை - ஒண்றிரண்டென் றெண்ணிப் பிரித்தெழுதிக் கடையிலக்கம் பெயர்த்துவிடலாகும் தருங் கடலின் மீனை அளவிடலாகும் வானத் . தாரகையை அளவிடலாம் சங்கரன்தாள் தமது சிரங்கொள் திருத் தொண்டர் புராணத்தை அளவிடகம் சேக் கிழார்க் கெளிதலது தேவர்க்கும் அரிதே' (சே. புரா-51) என்று விளக்குகிறார். இதில் இறுதியில் உள்ள தேவர் என்பதை இருவகையில் விளங்க வைக்கிறார். தேவலோக வாசிகளாலும் முடியாது என்பதும், அனபாயன் போற்றிய சிந்தாமணியைப் பாடிய திருத்தக்க தேவராலும் முடியாது என்பதும் அமையப் பாடியுள்ளார். மேலும் இச்சேக்கிழார் புராணத்தின் வழியே தனி அடியார், தொகையார் எண், திருக்கூட்டவகை, பல்வேறு வகையில் இறையருள் உற்றவர் தொகை, இல்லறம், துறவறநெறி நின்றவர் என்ற பல வகை விளக்கங்களைத் தந்து, பெரியபுராணத்தை நன்கு அலசி ஆராய்ந்து ஒரு விளக்கமாகத் தம் நூலை யாத்துள்ளார்.