பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராணம் 71 நானில ஐந்திணைச் சிறப்பையும் அவற்றில் வாழ்ந்த வேளாளர் பெருமையையும், தலைநகராம் காஞ்சியின் உயர்வையும் ஆங்கே அம்மையார் அருந்தவமியற்றி அறம்பல புரிந்த தன்மையினையும், தழுவக்குழைந்த நிலையினையும், பிற சிறப்பியல்புகளையும் பாடியுள்ளார். 128 பாடல்கள் உடைய அப்புராணத்தே 110 பாடல்கள் மேற்கூறிய சிறப்பு களையே காட்டுகின்றன. சேக்கிழார் சமயத்திலும் தமிழ்மொழியிலும் ஆழ்ந்த பற்றுள்ளவர் என்பதை நூல் முழுதிலும் காண இயலும். சைவ சமய அடிப்படை உண்மைகள், சாதி பேதமற்ற கோயில் வழிபாடு, அடியவர் வழிபாடு, பெண்கள் ஆண்களை ஒத்த உணர்வினராய்ச் சம உரிமை உடையவராய் வாழ்ந்து சமுதாயத்தையும் சமயத்தையும் பேணிக் காத்த நிலை, அரசர்கள் ஆட்சிமுறை, ஆளப்படுவோர் வாழ்க்கை நெறி முதலியவற்றை விளக்கிக் காட்டியுள்ளார். அப்படியே வரலாற்று அடிப்படையிலும் நிலநூல் அடிப்படையிலும் தமிழ்நாட்டில் இருந்த பல்வேறு சிறு நாடுகள், கோட்டங்கள் இவற்றின் பிரிவுகளையும் ஆங்காங்கே ஆண்ட அரசர்களின் வாழ்வு, நிலை முதலியவற்றையும் பல்வேறு சாதிகள் இருந்தும் அவற்றுள் வேறுபாடில்லாத சமுதாயநெறியினையும் விளக்கியுள்ளார். இப்பெரியபுராணத்துக்கு மூலமாகிய திருத்தொண்டத் தொகையினைப் பாடிய சுந்தரர், இறைவனை நோக்கி 'யாதினை அறிந்து என் சொல்லப் பாடுவேன்’ என வேண்ட சொற்றமிழ் பாடுக என இறைவன் அருளியதாக (தடுத்தாட். 70) கூறியதிலிருந்தும் வேறு பல இடங்களில் தமிழ்நலம் பாராட்டிய வகையிலும் இவர் தமிழ் உள்ளம் நன்கு விளங்கும். அப்படியே பல தேவாரப் பாசுரங் களுக்கு உரையென்னுமாறு அவரவர் வரலாற்றுக்கிடையில் இவர் பாடல்கள் சமய உண்மைகளையும் விளக்கங்களையும்