பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கல்லவை ஆற்றுமின் அவ்வாறு அவர் சென்ற வாயில் தெற்கு நோக்கிய வாயில் எனச் சேக்கிழார் குறிக்கிறார். தென்திசையின் மதிற் பறத்தும் பிறை உறிஞ்சு திருவாயில் முன்னாக (பாட்டு 31) என்பது சேக்கிழார் வாக்கு. எனவே, நந்தனார் தம் ஊரிலிருந்து நேரே வடக்கு நோக்கி வந்து தெற்கு வாயிலில் துயின்ற பொழுதே அந்தணர் அவரை எதிர் கொண்டனர் எனக் கொள்ளல் வேண்டும். காட்டுமன்னார் கோயில் மேற்கே உள்ள ஊர் அன்றோ! இவ்வாறு பல வகையில் எண்ணிப் பார்க்கின் நந்தனார் பிறந்த ஊர் தில்லைக்குத் தெற்கே உள்ள-திருப்புன்கூருக்கு அருகில் உள்ள-மயிலாடுதுறை வட்டத்தைச் சேர்ந்த, மேற்கா நாட்டு ஆதனூர் என்றே கொள்ளல் வேண்டும். வேற்காடு-சக்திவேற்காடே தமிழ்நாட்டுப் பலதலங்கள் ஆயிரத்து ஐநூறு ஆண்டு களுக்கு மேற்பட்டு மிகச்சிறப்புற விளங்குகின்றன. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களும் ஆழ்வார்தம் மங்களா சாசனம் பெற்ற திவ்விய தேசங்களும் கி.பி. மூன்றாம் நூற் றாண்டு முதலே தமிழ் நாட்டையும் தமிழரையும் தமிழையும் வாழ வைத்து வளர்த்து வருகின்றன. தென்பாண்டி நாடு தொடங்கி, தொண்டைநாடு வடநாடு வரையில் நம் நாயன் மாரும் ஆழ்வார்களும் அந்தப் பழைய காலத்தில் கால்கடுக்க நடந்தும் உருண்டும் உழன்றும் ஊர்தொறும் சென்று இறைவன் புகழ்பாடி இன்று வரையிலும் இனி மேலும் நாமெலாம் வாழ வழி காட்டியுள்ளனர். அத்தகைய பெருந் திருத்தலங்களுள் ஒன்றே இன்று மிகவும் சிறப்பாகப் போற்றப் பெறும் திருவேற்காடு எனும் அருள்தலம்.