பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கல்லவை ஆற்றுமின் 'அம்மலர்ச்சீர்ப் பதியை அகன்றி அயல்உளவாம் பதி அனைத்தும் மைமலரும் களத்தாரை வணங்கி மகிழ்வோடும் போற்றி’ (திருநா-34) என்றும், சுந்தரர் காளத்தியிலிருந்து ஒற்றியூர் வரும் வழியில் பல தலங்களைத் தரிசித்தார் என்பதை, "அங்குச் சிலநாள் வைகியபின் அருளாற் போந்து பொருவிடையார் தங்கும் இடங்கள் எனைப்பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ்ப்பாடி பொங்கு புணரிக் கரைமருங்கு புவியுட் சிவலோகம் போலத் திங்கள் முடியார் அமர்ந்த திருவொற்றிவூரைச் சென்றடைந்தார் (ஏயர்கோன் 199). என்றும் சேக்கிழார் கூறுவார். எனவே அவர்கள் இருவரும் இத்தலத்திற்கும் வந்து இறைவனைப் பாடியிருக்கக்கூடும் எனவும் அவை மறைந்துபோன பலவற்றுள் கலந்து போயிருக்கும் எனவும் எண்ண இடமுண்டாகிறது. எப்படி யாயினும் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வேற்காடு அம்மையும் அப்பரும் மகிழ்ந்துறையும் பெருந் தலமாக இருந்தது மறைக்க முடியாத ஒன்றன்றோ! ஞானசம்பந்தர் அந்த ஏழாம் நூற்றாண்டில் வேற்காட்டு வித்தகரைப் பாடியபோது, வேற்காடு உள்ளியர் உயர்ந்தார் இவ்வுலகினில்' என்றும் வேற்காடு 'ஈறில மொழிய மொழியா எழில் கூறினார்க் கில்லை குற்றமே” என்றும்