பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்காடு-சக்திவேற்காடே 79 ,ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டு பாடக் குணமாமே’ என்றும் இசைத்துப் போற்துகின்றனர். எனவே இத்திருவேற் காட்டினைப் பாடியவர்கள் இவ்வுலகில் உயர்ந்தார் ஆவர் என்பதும் அவர்தம் குற்றங்கள் இல்லையாகக் கழியும் என்பதும் யாவும் நல்ல குணமாகவே அமையும் என்பதும் எடுத்துக் கூறி, வழிபடுவார் அகவாழ்வு புறவாழ்வு இரண்டும் தூய்மையாக அமைய, நில்லா உலகில் நிலைத்த புகழொடு உயர்வார் என்பதை விளக்குகிறார். இவ்வுண்மை ஆயிரத்து முன்னுறு ஆண்டுகட்டு முன் மாத்திரமன்றி, இன்றும் நம் கண்முன்பும் உண்மையாகி உள்ளதைக் காண்கின்றோம். வேற்காடு என்னும் பெயர் பற்றிச் சற்றே எண்ணத் தோன்றுகின்றது. பழங்காலத்தில் தமிழ்நாட்டை நானில மாக்கி அவற்றுள் முல்லை சார்ந்த இடத்தைக் காடெ'ன உரைப்பர் எனக் காண்கிறோம். பழங்காலத்தில் காட்ட கத்தில் வேடன் கடலில் வலைவாணன்' என்றபடி காடுகளில் வேடுவர்கள் வாழ அவர்கள் சக்தியை வழிபட்டு வந்தார்கள் எனவும் காண்கின்றோம். முல்லைத்திணை நிலக் கடவுள் மாயோனாயினும் சத்தி வழிபாடு அங்கெல்லாம் சிறந்து நின்றமை தெளிவு. பின் முல்லையும் குறிஞ்சியும் திரிந்து பாலை நிலமாகிய பின்னர் முல்லையை அண்ணனுக்கும் குறிஞ்சியை மகனுக்கும் தியாகத்தொடு தந்த கொற்றவை தியாக வல்லியாய்ப் பாலை நிலத்துக்குக் குடியேறிவிட்டாள். போலும். எனினும் சத்தி'யாகிய அன்னையினை வேலாகக் கையிலேந்திய குமரனும் திருமாலுடன் தத்தம் இடத்திலேயும் அச்சக்திக்கு இடம் தந்துள்ளமை நாட்டின் பல இடங்களில் காணும் முறையாகும். - இறைவன் தங்கிய காடுகள் பல. வேற்காடு, ஆலங்காடு, மறைக்காடு, கடம்பவனம், தில்லைவனம், பனங்காட்டுர்