பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நல்லவை ஆற்றுமின் எனப்பல தலங்கள் தேவாரத்தால் போற்றப் பெறுகின்றன. எனினும் வேற்காடு என்ற இந்த ஊரின் பெயரிலே அன்று மட்டுமன்றி இன்றும் வேலாய் நின்று குமரனுக்கு வெற்றி தந்த சக்தியும் இணைந்தே கருமாரியாய் வீற்றிருப்பதைக் காண்கிறோம். சூரபதுமனை வென்று நிற்க, முருகனை அனுப்பிய வேதபுரீசன் சுடர் வேலைத் தந்து அனுப்பினான் என்பது வரலாறு. (சூரன) மாயிருந்திறலும் வரங்களும் இந்த மன்னுயிர் உண்பது, எப்படைக்கும். "நாயகமாவ தொரு தனிச் சுடர்வேல் நல்கியே மதலை கைக் கொடுத்தான்' (விடைபெறு 38) என்று காட்டுவர் கச்சியப்பர். கொடுத்தான்’ என்ற ஒரு சொல்லே பொருளைக் குறிக்கப் போதுமானதாக இருக்க, "கல்கியே மதலை கைக் கொடுத்தான் என்று என்று நல்கியே’ என மற்றொரு சொல்லையும் பெய்வானேன்? நல்கை' என்பது திராவிட மொழிகளிலேயே தமிழிலும் மலையாளத் திலும் மட்டும் உள்ள ஒரு சிறந்த சொல் (29897 page 240 ETY Dic). தன்னையே ஈவதற்கு ஒப்பாக உள்ள ஒன்றினைக் கொடுப்பதையே இது குறிக்கும். உடனுறை சக்தியையே வேலாக்கித் தன் மைந்தனிடம் கொடுத்ததையே கச்சியப்பர் இவ்வாறு குறிக்கின்றார். ஆம்! முன் சூரபதுமனுக்கு இறைவன் வரம் கொடுத்தபோது தன் சக்தியல்லால் வேறொன்றால் அம்மூவரையும் (சூரபதுமன், தாரகன், சிங்கமுகன்) வெல்ல இயலாது எனவே வரம் கொடுத்துள்ளன ரன்றோ! தேவா யாவரும் சென்று தொழப்படு மூவராகி மொழிந்திடு நுங்களைத் தாவிலாத நம் சக்தி ஒன்றே யலால் ஏவர் வெல்வர் என்று விளம்பி' (வரம்பெறு 27)